'என் பெண்ணை பற்றி எப்படி பேசலாம்?'.. விடாமல் துரத்திய நடிகர் அர்ஜுன்.. வசமாக சிக்கிய பயில்வான் ரங்கநாதன்

"இனியும் அவதூறுகள் பரப்பப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரித்திருந்தார்...
அர்ஜுன்
Published on: 
Updated on: 
2 min read

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது மத்திய சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நடிகர் அர்ஜுன் இளைய மகள் அஞ்சனா தனது 14 வருட காதலரான இசையா நட்டர் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இத்தாலியில் நடந்த இந்த திருமண விழாவில், நெருக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெற்றனர். அர்ஜுன், அவரின் மனைவி மற்றும் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொண்ட திருமண புகைப்படங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் பரவியது. இதில்  ஐஸ்வர்யாவின் கணவர் உமாபதி கலந்து கொள்ளவில்லை என்ற செய்திகள் தீயாய் பரவியது.

ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகனும், அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் கேம் மூலம் பிரபலமான உமாபதி ராமையா என்பவரை, 2024 ம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோவை போட்டு வந்த இந்த ஜோடி, கடந்த சில மாதங்களாக ஜோடியாக இருக்கும் புகைப்படங்களை பகிர்வது இல்லை. மேலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாகவும் இல்லை.

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனா திருமணத்தில் உமாபதி மற்றும் தம்பி ராமையாவின் குடும்பம் பங்கேற்காதது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் விவாகரத்து குறித்த சர்ச்சை பேச்சுகளும் அங்கேங்கே கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த ஒரு பதிலும் வரவில்லை.

இந்நிலையில் நடிகர் அர்ஜுன், தனது சமூகவலைதளத்தில் கடந்த 19 ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும் வெளியாகி வரும் ஆதாரமற்ற தகவல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் குறிப்பிடபட்டதாவது, எனது இளைய மகளின் திருமணத்தின்போது, எனது மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு யூகங்களும், விவாதங்களும் எழுந்தன. அவரது தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல், அவரது தனியுரிமையை மதித்து, அதுகுறித்து கருத்து தெரிவிப்பதை நான் திட்டமிட்டே தவிர்த்து வந்தேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், தனக்குப் பிடித்தபடி வாழும் சுதந்திரமும் உள்ளது. அவர் விரும்பினால், சரியான நேரத்தில் தனது தரப்பிலான விளக்கத்தை அவரே தெரிவித்திருந்தார்.

ஆனால், ஒரு தந்தையாக தனது மகளின் குணநலன்களையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் குறிவைத்து ஆதாரமற்ற, இழிவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் “எந்தவித ஆதாரமும் இன்றி தனது மகளை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என முத்திரை குத்துவது பொறுப்பற்ற செயல்” என்றும் “ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் தகவல்களைப் பரப்ப யாருக்கும் உரிமை கிடையாது” என்றும் தெரிவித்திருந்தார். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், "அவதூறு கருத்துக்கள் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியுள்ளதாகவும்" தெரிவித்திருந்தார். தனது மகளின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் சுயமரியாதையைப் பாதுகாக்கத் தொடர்ந்து துணை நிற்பேன் என்றும், இனியும் அவதூறுகள் பரப்பப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

இதற்கிடையில் நடிகரும் யூடியூபருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவித்தாக சொல்லப்படுகிறது. மேலும் ஐஸ்வர்யா-விற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகவும், அதனால் தான் அவரின் கணவர் உமாபதி அவரை பிரிந்தாகவும் அவதூறான கருத்துக்களை பொதுவெளியில் குறிப்பிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அர்ஜுன் அளித்த புகாரில் சைபர் கிரைம் போலீசார் பயில்வான் ரங்கநாதன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் சம்மன் வழங்கியதன் அடிப்படையில் இன்று காலை நடிகர் பயில்வான் ரங்கநாதன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்