ஆஸ்கர் போட்டியில் 8வது முறையாக இளையராஜா.. துரந்தர், பைசன் படங்களை முந்திய ‘கொந்தள்'

இதுவரை இளையராஜாவின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இளையராஜா இசையில் ஆஸ்கருக்கு சார்பிக்கப்பட்ட 8வது திரைப்படம்.. துரந்தர், பைசன் படங்களை கடந்த 'கொந்தள்'
இளையராஜா இசையில் ஆஸ்கருக்கு சார்பிக்கப்பட்ட 8வது திரைப்படம்.. துரந்தர், பைசன் படங்களை கடந்த 'கொந்தள்'
Published on
Updated on
1 min read

இளையராஜா இசையில் உருவான ‘கொந்தள்’ என்ற மராத்திய திரைப்படத்தை இந்தியா சார்பில் ஆஸ்கரின் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவுக்கு பரிந்துரை செய்துள்ளது இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (Film Federation of India).

ஒரு பெண்ணின் நெருக்கடி மிகுந்த உறவை ஆராயும் இந்தப் படத்தை, ‘கொந்தள்’ நாட்டுப்புறக் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் மியூசிக்கல் வகை திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

‘கொந்தள்’ படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கடந்த 2025-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகவில்லை. தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் ‘துரந்தர்’, ‘ஹனுமான் அம்ஷ்’, ‘தீகி’, ‘பாலன் தி பாய்’, ‘டொரோதி’, ‘அங்’, ‘இக்கிஸ்’, ‘பெட்டி’, ‘பைசன் காளமாடன்’, ‘மைன் வாபஸ் ஆளுங்கா’, ‘ஹக்’, ‘கவர்னர்’, ‘பமர்தோ’ மற்றும் ‘சிங் கீதம்’ உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றிருந்தன. இதில், இளையராஜா இசையமைத்த ‘டொரோதி’ திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதுவரை இளையராஜாவின் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

‘சுவாதி முத்யம்’, ‘குரு’ (1997), ‘நாயகன்’, ‘அஞ்சலி’, ‘தேவர் மகன்’, ‘ஹே ராம்’, ‘குருதிப்புனல்’ ஆகிய படங்கள் இளையராஜா இசையில் இந்தியா சார்பாக அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், இவை ஆஸ்கரின் நாமினேஷனில் இடம்பெறவில்லை.

இளையராஜா இசையில் ஆஸ்கருக்கு சார்பிக்கப்பட்ட 8வது திரைப்படம்.. துரந்தர், பைசன் படங்களை கடந்த 'கொந்தள்'
"ரொம்ப ஃபெண்டாஸ்டிக் சூரி..." - ரஜினிகாந்த் போல பேசிக்காட்டிய நடிகர்; மண்டாடி விழாவில் கலகலப்பு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com