“இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்தவன் தான் நான்” - பல வெற்றி படங்களை தமிழகத்திற்கு தந்தவர் இசைஞானி!

அவருடைய பாடல் இல்லாம எந்த குழந்தைக்கும் தாலாட்டு இல்லை, அவருடைய பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்லை..
“இளையராஜா பாடல்களை கேட்டு வளர்ந்தவன் தான் நான்” -  பல வெற்றி படங்களை தமிழகத்திற்கு தந்தவர் இசைஞானி!
Published on
Updated on
1 min read

இன்று சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் 50 ஆவது ஆண்டு பாராட்டி விழாவில் கலந்து கொண்ட தமிழகத்தின் விளையாட்டு துறை அமைச்சர் மற்றும் துணை முதலைமைச்சரான உதயநிதி ஸ்டாலின் “தமிழ்நாட்டிற்கு எத்தனையோ அடையாளங்கள் இருக்கிறது அதில் முக்கியமான அடையாளமாக யாரும் அழிக்க முடியாத அடையாளமாக இசைஞானி இளையராஜாவும் அவருடைய இசையும் இன்று நம்முடன் இருக்கிறது.

ராஜா சாரின் இசைக்கு நானும் ஒரு ரசிகர், இன்றைக்கு நாம் அவரை பாராட்டி கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்திருந்தாலும் நாம் எல்லோரையும் தாலாட்டி கொண்டிருக்கும் இசை தாய் தான் இளையராஜா. அவருடைய பாடல் இல்லாம எந்த குழந்தைக்கும் தாலாட்டு இல்லை, அவருடைய பாடல் இல்லாமல் இளமையில் துள்ளல் இல்லை, காதல் இல்லை. வயல் வெளி, டீக்கடை, ஆட்டோ, திருவிழா, திருமணம் என அனைத்து இடத்திலும் இளையராஜா.

இசையமைப்பாளர் என சொல்வதை விட இசை மருத்துவர் என சொல்லும் அளவிற்கு அத்தனை பேருக்கும் மன அழுத்ததை போக்க கூடிய சிறந்த இசையமைப்பாளர். எல்லோர் வாழ்க்கையிலும் வழித்துணையாக இருப்பவர் இசைஞானி. அவருடைய பாடல்களை கேட்டு வளர்ந்தவன் தான் நானும், எனக்கும் எல்லா சூழ்நிலைகளிலும் துணையாக இருந்தது இவரின் பாடல்கள் தான், பல வெற்றி படங்களை தமிழகத்திற்கு தந்த பெருமை இளையராஜாவையே சேரும். 82 வயதிலும் புது புது சாதனைகளை படைத்தவர் இளையராஜா” என கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com