பிக் பாஸில் காதலைச் சொன்ன இன்ஸ்டா பிரபலம்! - “உன் பீலிங்ஸால் ஏமாந்துட்ட!” - மகளை அழைத்துச் செல்ல மேடைக்கு வந்த பெற்றோர்!

பெற்றோர் நேரடியாக நிகழ்ச்சிக்குள் வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பிக் பாஸில் காதலைச் சொன்ன இன்ஸ்டா பிரபலம்! - “உன் பீலிங்ஸால் ஏமாந்துட்ட!” - மகளை அழைத்துச் செல்ல மேடைக்கு வந்த பெற்றோர்!
Published on: 
Updated on: 
2 min read

இந்தி, தமிழ், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடந்துவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. தமிழில் தற்போது 10வது சீசன் நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அதே போல் மலையாளத்தில் இது 8வது சீசனை மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் போட்டியை பொறுத்த வரை போட்டியாளர்களின் விளையாட்டுகளைத் தாண்டி அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சம்பவங்களாலும் அவ்வப்போது விவாதங்களை ஏற்படுத்தி வருவது வழக்கம். காதல், கோவம், அழகை, நட்பு மற்றும் புது உறவுகள் என தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி அதற்கான வரவேற்புகளும், சில நேரங்களில் குடும்பம் மற்றும் ரசிகர்களின் வெறுப்புகளையும் கூட பெற நேரிடும்.

இந்த வகையில் மலையாள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் சக போட்டியாளர் மீது காதலை வெளிப்படுத்திய இளம்பெண் ஒருவரின் பெற்றோர் நேரடியாக நிகழ்ச்சிக்குள் வந்து அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசனில் இன்ஸ்டா இன்ஃப்ளுயன்ஸர் நேஹா ஃபாத்திமா போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். இவருக்கும் சக போட்டியாளரான சந்தோஷ் ராஜ் என்ற தாஷி என்பவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில் நேஹா  தனது காதலை சந்தோஷிடம்  வெளிப்படுத்தியுள்ளார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் இந்த உறவைத் தொடர விரும்புவதாகவும், அதற்கு தனது பெற்றோரின் சம்மதம் அவசியம் என்றும் நேஹா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் நிகழ்ச்சிக்குள் பேசுபொருளான நிலையில், வர இறுதியில் நேஹாவின் பெற்றோர் நேரடியாக நிகழ்ச்சிக்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வர சண்டே எபிசோடில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மோகன்லால் முன்னிலையில் நேஹாவின் தந்தை முகமது ஷெமி மற்றும் தாயார் ஷாரூபா ஷமீம் ஆகியோர் மேடைக்கு வந்தனர். அப்போது தங்களுடன் வீட்டுக்கு வருமாறு மகள் நேஹாவிடம் கேட்டுக்கொண்டனர். போட்டியாளர்கள் தங்களது இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருப்பதாகவும், நேஹா தனது உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தவறான முடிவை எடுப்பதாக அவரது தாயார் வேதனையுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நேஹாவின் தந்தை, குடும்பத்தை மறந்துவிட்டாயா? என்று மகளிடம் கேள்வி எழுப்பியது புரோமோவில் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கிருந்த சூழல் கொஞ்சம் கடினமாக மாறியது.

இதற்கிடையே, நேஹாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் மோகன்லால், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பெற்றோரின் இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து நேஹா கண்ணீர் விட்டு அழும் காட்சிகளும் நிகழ்ச்சியின் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடியோ இணையத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, நேஹா இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் காதலை வெளிப்படுத்தியுள்ள சந்தோஷ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படும் நிலையில், இருவரது உறவுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளரின் பெற்றோர் நேரடியாக வந்து மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றிருப்பது ஒருபுறம் பேசுபொருளாகியுள்ள நிலையில், மறுபுறம் மதம் கடந்த காதல், தனிநபர் விருப்பம் மற்றும் பெற்றோரின் சம்மதம் குறித்த விவாதங்களும் மீண்டும் எழுந்துள்ளன. இருப்பினும், பெற்றோரின் எதிர்ப்புக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தடுத்த எபிசோடுகளில் இந்த விவகாரம் எந்த முடிவை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.