

சூர்யா நடிப்பில் மலையாள இயக்குனர் ஜித்துமாதவன் இயக்கத்தில் நவம்பர் 6 வெளியான சீன் திரைப்படம் ற்றகிரயரக்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் சுமார் 250 கோடி வசூலித்து சூர்யாவின் ஹாட்ரிக் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே வருடத்தில் மூன்று ரூ.200 கோடி வசூல் படம் கொடுத்த முதல் நடிகர் என்ற சாதனை நடிகர் சூர்யா படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்பு RJ பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘கருப்பு’ படம் ரூ.340 கோடி வசூலையும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைபடம் ரூ.260 கோடி வசூலையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘சீன்’, இண்டஸ்ட்ரி ஹிட்டான ஜெயிலர் 2 ஹவுஸ்புல் ஷோவாக இருக்கும் போதே திரைக்கு வந்தது. சூப்பர் ஸ்டார் படம் வசூலை குவித்து கொண்டிருக்கும் போதே பெரும் சவாலான நிலையில் சீன் படம்களமிறங்கியது, படக்குழுவினரின் படத்தின் மீது கோடனிருந்த நம்பிக்கையை கத்தியது என்றே சொல்லலாம். சில திரையரங்குகள் சூர்யாவின் சீன படத்தை திரையிட முடியாது என்றும் வெளிப்படையாக தெரிவித்திருந்தனர். வசூல் பாதிக்கப்படும் என்று சொல்ல.. முதல் வாரம் சவாலாக மாறியது.
ஆனா விடுவாங்களா நம்ம அன்பான ஃபேன்ஸ், திரைப்படத்திற்கு பாசிட்டிவ் ரீவிவ், ஹைப் என கொடுத்து ட்ரெண்டிங்கில் கொண்டுவர படம் சூடுபிடித்தது. அதிலிருந்து இரண்டாவது வாரம் வரை படம் வெற்றிகரமாக ஓடி.. 240 கோடி வசூலை கடந்துள்ளது. அந்த வகையில் முதல் 3 நாட்களில் ரூ.145 கோடிக்கும் மேலும், 5 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேலும் வசூலை குவித்தது.
சரி வாங்க படத்தை பத்தி பேசுவோம்..
அடாவடி போலீஸ் அதிகாரியாக வரும் இன்பராஜ் (சூர்யா), தனது வேலையை ரிசைன் செய்யப்போவதாகச் சொல்கிறார். ஆனால், அவரது மேலதிகாரி ரிசைனை ஏற்காமல், தொடர்ந்து வேலைய பார்க்க சொல்கிறார்.
அதற்குக் காரணம், ஒரு சீரியல் கில்லரை அரெஸ்ட் பண்ணினால், அதுதான் தனது கடைசி கேஸ் என்று சொல்லி இன்பராஜ் ரிசைன் பண்ண முடிவெடுத்திருப்பார். சீரியல் கில்லர் அர்ரெஸ்ட்-க்கு பிறகும் ஒரு கொலை நடக்கிறது. இந்தக் கொலையாளி யாரு? ஏற்கெனவே நடந்த கொலைகளோட அதே மெத்தடை ஃபாலோ பண்றது யாரு? இதையெல்லாம் கண்டுபிடிக்க சூர்யாவின் உதவி தேவைப்படுவதால், அவருடைய ரிசைனேஷனை ஏற்க மேலதிகாரி மறுக்கிறார்.
இங்கிருந்துதான் ட்விஸ்ட்டும், த்ரில்லரும் ஆரம்பமாகும். இன்பராஜ் ரிசைன் பண்ண இன்னொரு காரணமும் இருக்கும். அது என்ன? அந்தச் சவாலையும் பேஸ் பண்ணி சீரியல் கில்லரை எப்படி பிடிக்கிறார் என்பதுதான் கதை. இவருக்கு அசிஸ்டென்ட்டாக வருபவர்தான் நஸ்ரியா. அதேபோல், வில்லனாக ‘பிரேமலு’ நாயகன் நஸ்லென் நடித்துள்ளார்… நஸ்லெனின் நடிப்பு வேற லெவல்! இதுவரை சார்மிங்கான, சாக்லேட் பாயாகப் பார்த்தவரை இப்படியொரு வில்லனாகப் பார்க்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். அதுவும் அவருடைய கூல் அண்ட் கேஷுவலான நடிப்பு செம.
நிறைய சொல்லி படத்தை ஸ்பாய்லர் பண்ண விரும்பல. நீங்களே பார்த்து எக்ஸ்ப்ளோர் பண்ணுங்க. ஆனா, இன்னொரு விஷயம்... 100% FUN கேரண்டி! பெருசா காமெடி ஆர்ட்டிஸ்ட்கள் யாரும் இல்லை என்றாலும், காமெடிக்குப் பஞ்சமே இல்லை.
இந்தப் படத்தோட முக்கியமான பலமே காஸ்டிங்தான். எல்லா கேரக்டர்களுமே ஸ்கோர் பண்ணியிருக்காங்க. படம் முடிஞ்சு வெளியே வந்த பிறகும், ஒவ்வொரு கேரக்டரும் நமக்கு ஞாபகம் இருப்பாங்க. அந்த அளவுக்கு எல்லோரையும் அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். அதற்குப் பெரிய சல்யூட். மொத்தத்தில், த்ரில்லர், ட்விஸ்ட், காமெடி என எதற்கும் குறைவில்லாத ஒரு ஜாலியான என்டர்டெயின்மென்ட் படம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.