"ஜெயிலர் 2-ஐ தூக்கிவிட்டு Scene படத்தை போட வாய்ப்பில்லை" - சூர்யா ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தியேட்டர் நிர்வாகம்!

இந்நிலையில் வெளியாக இருக்கும் திரைப்படங்களுக்குக்கான திரையரங்குகள் எதிர்பார்த்த அளவுக்கு..
"ஜெயிலர் 2-ஐ தூக்கிவிட்டு Scene படத்தை போட வாய்ப்பில்லை" - சூர்யா ரசிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட தியேட்டர் நிர்வாகம்!
Published on: 
Updated on: 
1 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் கடந்த அக்டோபர் 15 வெளியானது. வெளியான நாள் முதல் தற்போது வரை  ரசிகர்களாலும், திரையரங்க உரிமையாளர்களாலும் கொண்டாடப்பட்டது வருகிறது. தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த திரைபடம் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளளது ஜெயிலர் 2. 

75 வயதிலும் இந்த சாதனையை ரஜினிகாந்த் தக்கவைத்து “தலைவரு நிரந்தரம்” என்பதை நிரூபித்து மகுடன் சூடியுள்ளார். தமிழ் சினிமாவில் முதல் ₹100 கோடி வசூல் செய்த படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படம் மூலம் சுமார் 900 கோடி வசூல் சாதனையை நெறுக்கியுள்ளார். தீபாவளிக்குள் இத்திரைப்படம் 1000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் அதன் வசூல் வேட்டை இந்த மாதம் முழுவதும் தொடரும் என்றே சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு தமிழில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. சூர்யாவின- சீன், நயன்தாராவின் - மூக்குத்தி அம்மன் 2, விஜய் ஆண்டனியின் - அப்பா குட்டி, பிரபுதேவாவின் - ‘மூன் வாக்’ மற்றும் ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகவுள்ள ‘ராமாயணா’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. பொதுவாக தீபாவளியை குறிவைத்து படங்கள் வெளியாவது வழக்கம். இந்த வருடம் முன்னதாக வெளியான ஜெயிலர் 2 வெளியாகி தற்போது வரை தரவரிசையில் முன்னணியில் இருந்து வருகிறது. 

திரையரங்குகள் தீபாவளி அன்றும் “ஜெயிலர் 2-க்கு" முன்னுரிமை அளிக்கும் என்று தெரிகிறது. இந்நிலையில் வெளியாக இருக்கும் திரைப்படங்களுக்குக்கான திரையரங்குகள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்காது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் கும்பகோணத்தில் உள்ள ஒரு திரையரங்கம் சூர்யாவின் சீன படத்தை வெளியிட முடியாததற்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், எங்கள் திரையரங்கில் மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிற ஜெயிலர் 2 திரைப்படம் பெரும்ஆதரவை பெற்றுள்ளது. அதன் வெற்றிகரமான சூழ்நிலையில், வணிக ரீதியான முடிவை எடுக்க வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ‘ஜெயிலர் 2’ நான்காவது வாரத்திலும் தொடர்ந்து திரையிட முடிவு செய்துள்ளதாகவும், அதனால் சீன் திரையிட முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் “அன்பனா ரசிகர்களே, இந்தத் தீபாவளி வெளியீட்டிற்கு "சீன்" படம் முன்னுரிமையாக இருந்தது. நாங்கள் உண்மையாகவே இந்தப் படத்தை எங்கள் திரைகளுக்கு கொண்டு வந்து, இந்தத் தருணத்தை உங்களுடன் கொண்டாட விரும்பினோம்.. ஆனால் அது முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் அதற்காக  மன்னிப்பும் கோரியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்