"இதுதான் உங்க ஜர்னலிசமா? போட்டோவை டெலீட் பண்ணா மட்டும் போதாது!" பாலிவுட் அக்கவுண்ட்டை விளாசிய சாரா டெண்டுல்கர்!

சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கிவிட்டாலும், சாரா அதை விட்டுவிடவில்லை.
Sara Tendulkar viral video
Sara Tendulkar viral videoSara Tendulkar viral video
Published on
Updated on
1 min read

சமூக வலைதளங்களில் பிரபலமான பக்கம் ஒன்றில், சாரா டெண்டுல்கர் மற்றும் அவரது அண்ணி குறித்து அவதூறான கருத்துகளுடன் வீடியோ ஒன்று பகிரப்பட்டிருந்தது. இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி சாரா டெண்டுல்கர் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டைப் பகிர்ந்துள்ள அவர், இதுபோன்ற பதிவுகளைச் செய்பவர்களின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த வீடியோவில் பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் மிகவும் அருவருக்கத்தக்கதாக இருப்பதாகக் குறிப்பிட்டு, "இதுதான் ஜர்னலிசமா? எங்களைச் சும்மா விட்டுடுங்க" என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அந்த பக்கம் சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நீக்கிவிட்டாலும், சாரா அதை விட்டுவிடவில்லை. வீடியோவை நீக்கிவிட்டால் மட்டும் உங்கள் செயல் அருவருப்பானது அல்ல என்று ஆகிவிடாது என்பதை அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். சாரா டெண்டுல்கர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்போதும் தனது வாழ்க்கை குறித்த சுவாரசியமான தருணங்களைப் பகிர்வது வழக்கம். குறிப்பாக, சமீபத்தில் அவரது சகோதரர் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் தொழில்முனைவோர் சானியா சந்தோக் ஆகியோரின் திருமண நிகழ்வுகளின் புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார்.

மார்ச் 5-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமண நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. "சாஜ்" (SaaJ) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தத் திருமணத்திற்குப் பல முன்னணி நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர். அமிதாப் பச்சன், ஷாருக்கான், எம்.எஸ். தோனி, யுவராஜ் சிங் மற்றும் பர்தன் அக்தர் எனப் பல திரை மற்றும் கிரிக்கெட் உலகின் முக்கியப் பிரமுகர்கள் இந்தத் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு தொடர்பான வீடியோவைப் பயன்படுத்தி, உடல் கேலி செய்யும் செயலில் ஈடுபட்ட அந்த பாப்பராசி பக்கத்தின் நடவடிக்கைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு பொது இடத்தில் இருக்கும் பிரபலங்கள் மீது இது போன்ற தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துவது ஏற்புடையதல்ல என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com