``பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" வசூலில் லியோவைத் தாண்டிய ஜெயிலர் 2.. அவருக்கு அவர் மட்டும்தான் போட்டி.. 9வது நாளில் படைத்த சாதனை!

தமிழ்சினிமாவில் அதிகபட்ச வசூல் செய்த திரைப்படமாக 660 கோடியுடன் 2.O முதலிடத்தில் இருக்கும் நிலையில், விரைவில் அதன் வசூல் சாதனையை முறியடித்து 700 கோடியை தொட்ட முதல் தமிழ்திரைப்படம் என்ற மைல்கல்லை ஜெயிலர் 2 படைக்கவிருக்கிறது.
"பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" வசூலில் லியோவைத் தாண்டிய ஜெயிலர் 2.. அவருக்கு அவர் மட்டும்தான் போட்டி.. 9வது நாளில் படைத்த சாதனை!
"பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" வசூலில் லியோவைத் தாண்டிய ஜெயிலர் 2.. அவருக்கு அவர் மட்டும்தான் போட்டி.. 9வது நாளில் படைத்த சாதனை!
Published on: 
Updated on: 
1 min read

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் 9 நாட்களில் 628 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் டாப் 2 அதிக வசூல் செய்த படங்களும் ரஜினிகாந்த் நடித்த படங்களாக மாறியிருக்கிறது.

முன்னதாக இரண்டாம் இடத்தில் இருந்த விஜய்யின் லியோ பட வசூலை ஜெயிலர் 2 முறியடித்துள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக்கியிருக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்கரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர்.

மோகன்லால், சிவராஜ்குமார், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். 

வெறும் 9 நாட்களில் உலகளாவிய வசூல் 600 கோடி ரூபாயை கடந்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம், ஏற்கனவே இந்தவருடத்தின் அதிகபட்ச வசூல் படங்களான Drishyam: The Conclusion, ஹனுமான் அன்ஷ், பார்டர் 2 படங்களின் வாழ்நாள் வசூலைக் கடந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் லியோ திரைப்படத்தின் மொத்தவசூலை உடைத்திருக்கும் ஜெயிலர் 2, தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த 2வது படமாக உருவெடுத்துள்ளது. முதலிடத்திலும் ரஜினிகாந்த் நடித்த 2.O படமே இருப்பதனால் நேற்றைய தினம் சன்பிக்சர்ஸ் வெளியிட்ட போஸ்டரில் இருந்தபடி தான் "பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" என்பதை ரஜினிகாந்த் நிரூபிய்த்துள்ளார்.

தமிழ்சினிமாவில் அதிகபட்ச வசூல் செய்த திரைப்படமாக 660 கோடியுடன் 2.O முதலிடத்தில் இருக்கும் நிலையில், விரைவில் அதன் வசூல் சாதனையை முறியடித்து 700 கோடியை தொட்ட முதல் தமிழ்திரைப்படம் என்ற மைல்கல்லை ஜெயிலர் 2 படைக்கவிருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முதல் 100 கோடி, 500 கோடி வசூலை கொடுத்த ரஜினிகாந்த் 1000 கோடி என்ற மைல் கல்லையும் எட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

"பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" வசூலில் லியோவைத் தாண்டிய ஜெயிலர் 2.. அவருக்கு அவர் மட்டும்தான் போட்டி.. 9வது நாளில் படைத்த சாதனை!
வித்யாபாலன் வீடியோவில் சந்தானம்! வெளியாகுமா ஜெயிலர் 2 'Uncut' வெர்ஷன்.. நெல்சனிடம் ரசிகர்கள் நேரடி கோரிக்கை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com