

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தைவிட அதிக வசூலைக் குவித்துள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்களைப் பெருவாரியாக ஈர்த்தாலும், ஓடிடியில் ‘இயக்குநரின் கட்’ அல்லது ‘அன்கட்’ வெர்ஷன் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்புத் தளத்தில் நடிகை வித்யா பாலனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ வெளியானதுதான் இந்தக் கோரிக்கைக்குக் காரணம்.
அந்த வீடியோவில், வித்யா பாலன் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டும்போது, பின்னணியில் நடிகர் சந்தானம் இருப்பது தெரிகிறது.
நடிகர் சந்தானம் ஜெயிலர் 2 திரைப்படத்துக்காக 10 நாட்கள் படப்பிடிப்பில் ஈடுபட்டதாகவும், எடிட்டிங்கின்போது அவரது காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலைப் படக்குழு உறுதிப்படுத்தவில்லை.
ஆனாலும், சந்தானம் நடித்திருந்தால் அவரது காட்சிகளையும் சேர்த்து, ‘அன்கட்’ வெர்ஷனாக ஓடிடியில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த பல காட்சிகள் வெட்டப்பட்டதாக அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷம்சுதீன் விமர்சித்திருந்தார்.
இதனால், மோகன்லாலின் ரசிகர்கள் பலரும் ‘அன்கட்’ வெர்ஷன் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிலர் 2 திரைப்படம், ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இப்படம் 9 நாட்களில் ரூ.628 கோடி வசூல் செய்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.