ஜெயிலர் 2 ட்ரெய்லர் வெளியானது! ரஜினியின் மாஸ் என்ட்ரி... கேமியோவில் ஹிருதிக் ரோஷனா?

ஜெயிலர் 2-ல் கேமியோ ரோலில் நடிக்கப் போவது யார் என்ற ஆவல் தொடக்கத்திலிருந்தே இருந்து வருகிறது..
jailer 2
Published on: 
Updated on: 
2 min read

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும். உலகளவில் 650 கோடி ரூபாய் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ முதல் பாகத்தைப் போலவே, 'ஜெயிலர் 2' பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பாகத்தை போல் ஏராளமான சண்டைக் காட்சிகளும் பொழுதுபோக்கும் இருக்கும் என்பதே  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சன், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் 2 திரைப்படம் வரும் அக்டோபர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 2.25 நிமிடம் கொண்ட இந்த ட்ரெய்லரில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டிக்கொள்கிறது. தனக்கே உரித்தான தனது ஸ்டைலுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலக்குகிறார்.

jailer 2
jailer 2

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’ஜெயிலர் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி ஆக்‌ஷன் அவதாரத்தில் களமிறக்கிய படம் ஜெயிலர் முதல் பாகம், அதே போல் ஜெயிலர் 2 -ம் இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் நகைச்சுவை காட்சிகளுக்கும் இடம் பெற்றுள்ளது என்பதால், 'டபுள் ட்ரீட்' ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ‘அலா பொலேலோ' மற்றும் ‘One Name’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஜெயிலர் 2-ல் எஸ் ஜே.சூர்யா, யோகி பாபு , வித்யாபாலன், பூர்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஜெயிலர் 2 படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவது யார் என்ற ஆவல் தொடக்கத்திலிருந்தே இருந்து வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி கேமியோ ரோலில் இடம் பெறுவர் என செய்திகள் வெளியானது. தற்போது வெளியான டிரெய்லரில் இருந்து, ஹிருதிக் ரோஷன் இடம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com