‘ஜெயிலர் 2’ அன்கட் வெர்ஷன்? OTT-யில் காத்திருக்கும் 30 நிமிட சர்ப்ரைஸ்! மிஸ் ஆன சந்தானம் காட்சிகள் சேர்க்கப்படுமா?

ஓடிடியில் ‘இயக்குநரின் கட்’ அல்லது ‘அன்கட்’ வெர்ஷன் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.
jailer 2
Published on: 
Updated on: 
2 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் கூட்டணியில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15 வெளியாகி தமிழ் சினிமாவில் வசூலில் புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது வரை ‘ஜெயிலர் 2’ படம் சுமார் 900 கோடி வசூலை நெருங்கியுள்ளது. திரையரங்குகளில் இன்னும் ஹவுஸ் புல்-ளாக ஓடுவதால் தீபாவளிக்குள் 1000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்படுகிறது. ஜெயிலர் முதல் பாகத்தை விட அதிக வசூலைக் குவித்துள்ள இந்தத் திரைப்படம், ரசிகர்களைப் பெருவாரியாக ஈர்த்தாலும், ஓடிடியில் ‘இயக்குநரின் கட்’ அல்லது ‘அன்கட்’ வெர்ஷன் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர்.

'ஜெயிலர்' முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஹிருத்திக் ரோஷன், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ்.ஜே. சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனால் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. படம் வெளியான பிறகு சிலரின் ஸ்கிரீன் டைம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோரின் கதாபாத்திரங்களுக்கு இன்னும் கூடுதல் ஸ்கிரீன் டைம் இருந்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே, 'ஜெயிலர் 2' திரைப்படம் ஓடிடி தளத்தில் சுமார் 30 நிமிடங்கள் கூடுதல் காட்சிகளுடன் கூடிய அன்கட் வெர்ஷனாக வெளியாகலாம் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. திரையரங்குகளில் வெளியான பதிப்பில் இடம்பெறாத சில காட்சிகள் இந்தப் பதிப்பில் சேர்க்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. குறிப்பாக மோகன்லால், விஜய் சேதுபதி, ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட நடிகர்களின் கூடுதல் காட்சிகளுடன், நடிகர் சந்தானம் தொடர்பான காட்சிகளும் இடம்பெறலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

'ஜெயிலர் 2' திரைப்படத்தில் சந்தானம் நடித்திருக்கிறாரா? என்ற கேள்வியும் ஏற்கெனவே சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. நடிகை வித்யா பாலனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவில் சந்தானம் இடம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து, அவர் படத்தில் நடித்திருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன.

இதனால் ஓடிடி பதிப்பில் சந்தானத்தின் காட்சிகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. 'ஜெயிலர் 2' திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய தளங்களில் வெளியாகலாம் என்றும், நவம்பர் மாத இறுதியில் ஓடிடி வெளியீடு இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் அன்கட் வெர்ஷன் வெளியாகுமா, அதில் எந்தெந்த நடிகர்களின் காட்சிகள் இடம்பெறும், ஓடிடி வெளியீட்டுத் தேதி என்ன என்பது குறித்து படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

திரையரங்குகளில் பார்த்த படத்தைவிட கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் பார்க்க முடியுமா என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு படக்குழு என்ன பதில் அளிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.