"அவர்தான் சூப்பர் ஸ்டார்.. " ஜெயிலர் 2 -வின் மேஜிக்கல் வெற்றி.. 75 வயதிலும் தொடரும் வசூல் வேட்டை! வியக்கும் ஜென் ஆல்பா!

எத்தனை கோடி வசூல், வெற்றி, தோல்விகள் என அனைத்தையும் கடந்து, இத்தனை ஆண்டுகளாகச் சினிமாவில் ஒரு நட்சத்திரமாக நிலைத்திருப்பதுதான் ரஜினிகாந்த் செய்த மிகப்பெரிய சாதனை.
Jailer 2's Magical Success: Box Office Juggernaut Continues at 75, Astounding Gen Alpha!
"அவர்தான் சூப்பர் ஸ்டார்.. " ஜெயிலர் 2 -வின் மேஜிக்கல் வெற்றி.. 75 வயதிலும் தொடரும் வசூல் வேட்டை! வியக்கும் ஜென் ஆல்பா!
Published on: 
Updated on: 
2 min read

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் 2, தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உருவெடுத்துள்ளது.

75 வயதில், ஐந்து தசாப்த காலத் திரைப்பயணத்தில் மிகச் சில சூப்பர் ஸ்டார்களால் மட்டுமே சாதிக்க முடிந்த ஒன்றை ரஜினிகாந்த் செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் முதல் ₹100 கோடி வசூல் செய்த படத்தைக் கொடுத்த ரஜினிகாந்த், முதல் ₹700 கோடி வசூல் செய்த படத்தையும் கொடுத்துள்ளார்.

Jailer 2 Poster
Super Star Rajinikanth

1970-களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு நடிகருக்கு, இது வெறும் வசூல் சாதனை மட்டுமல்ல. மாறிவரும் ரசிகர்களின் ரசனைகள், பரிணாம வளர்ச்சி பெறும் சினிமா, அடுத்தடுத்த தலைமுறைகளின் திரைப்பட மொழி என அனைத்தையும் கடந்து, அவரது நட்சத்திர அந்தஸ்து எப்படி நிலைத்து நிற்கிறது என்பதற்கான ஓர் அடையாளம் இது.

ரஜினிகாந்த் நீண்டகாலமாகச் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டு வருகிறார். பல்வேறு உணர்ச்சிகள் ததும்பும் காவியங்களையும், ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் கமர்ஷியல் படங்களையும் கொடுத்துள்ளார். ஆனால், அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்பதை அடுத்த தலைமுறையினருக்கும் உணர்த்திய படம் சிவாஜி. அதைத் தொடர்ந்து மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெற்ற புதுமையான திரைப்படம் எந்திரன்.

ஒரு ரஜினிகாந்த் படத்தின் வெற்றி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்பதைக் காட்டிய படங்கள் இவை. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், பா. ரஞ்சித்தின் கபாலி, காலா போன்ற திரைப்படங்கள், ரசிகர்கள் விரும்பும் பிரம்மாண்டமான மாஸ் ஆளுமையைத் தக்கவைத்துக்கொண்டே, ரஜினிகாந்தின் வெவ்வேறு பரிமாணங்களை ஆராய்ந்தன.

பேட்ட ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. தர்பார் அவரது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. 2.0 திரைப்படம் தனது அறிவியல் புனைகதைக் களம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மூலம் அந்தப் பிரம்மாண்டத்தை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்றது.

Rajinikanth in Jailer 2
Rajinikanth in Jailer 2

2023-ல் வெளியான ஜெயிலர், 70 வயதைக் கடந்த ஒரு நடிகரால் எவ்வளவு பெரிய மாஸ் ஹிட்டைக் கொடுக்க முடியும் என்ற வரையறைகளை உடைத்தெறிந்தது.

இப்போது, வர்த்தகக் கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் (Sacnilk) தகவலின்படி, நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் ₹744 கோடி வசூலித்துள்ளது. இந்த வசூல், 2.0 மற்றும் முதல் ஜெயிலர் உள்ளிட்ட இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற படங்களைவிட அதிகம்.

ரஜினிகாந்த் இதுவரை நடித்த 12 திரைப்படங்கள் ₹100 கோடி வசூலைக் கடந்துள்ளன.

எத்தனை கோடி வசூல், வெற்றி, தோல்விகள் என அனைத்தையும் கடந்து, இத்தனை ஆண்டுகளாகச் சினிமாவில் ஒரு நட்சத்திரமாக நிலைத்திருப்பதுதான் ரஜினிகாந்த் செய்த மிகப்பெரிய சாதனை.

சினிமா எவ்வளவோ மாறிவிட்டது. ரசிகர்களின் ரசனைகள் மாறிவிட்டன. திரைப்பட வியாபாரம் உலகம் முழுவதும் விரிவடைந்துள்ளது. ரசிகர்கள் உலக சினிமாக்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இனி திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம்கூட எழுந்தது. எத்தனையோ நடிகர்கள் வந்து சென்றுவிட்டார்கள்.

இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும், இத்தனை தலைமுறைகள கடந்தும் ஜென் ஆல்பாவிடம் அதே உச்சத்தில் நிலையாக, ஒரே சூரியன், ஒரே சந்திரன் என்பதைப்போல, ஒரே சூப்பர் ஸ்டாராக நிலைத்து நிற்கிறார் ரஜினிகாந்த்.

Jailer 2 Poster
Jailer 2 Poster

கடின உழைப்பு, திட்டமிடல், அர்ப்பணிப்பு என அனைத்தையும் கடந்து, ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தி வருகிறார். அதுதான் அவரை இத்தனை ஆண்டுகளாக நிலைத்திருக்கச் செய்கிறது.

தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வில்லனாக இருந்தாலும் சரி, வயதான ஓய்வுபெற்ற அதிகாரியாக இருந்தாலும் சரி, மக்களை ஈர்க்க அவர் தவறுவதில்லை.

75 வயதிலிருந்து 95 வயதானாலும் இந்த மாயாஜாலத்தை அவர் தொடர்வார்.

அவர்தான் சூப்பர் ஸ்டார்!

Jailer 2's Magical Success: Box Office Juggernaut Continues at 75, Astounding Gen Alpha!
``பாக்ஸ் ஆபீஸ் பேரரசன்" வசூலில் லியோவைத் தாண்டிய ஜெயிலர் 2.. அவருக்கு அவர் மட்டும்தான் போட்டி.. 9வது நாளில் படைத்த சாதனை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com