"கவுண்டமணி முதல் செந்தில் வரை... பலரின் வாழ்க்கையை மாற்றிய கே. பாக்யராஜ்!" - வெறும் பெயராக இல்லாமல் 'சகாப்தமான மனிதர்'

'இன்றுபோய் நாளை வா' என்ற திரைப்படத்தின் வாயிலாக முதல் முறை வசனம் பேசி நடிக்கவைத்துள்ளார்.
Tamil cinema legend
Tamil cinema legendTamil cinema legend
Published on
Updated on
2 min read

தமிழ் சினிமாவின் பன்முகக் கலைஞர், நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் என பல அடையாளங்களால் அறியப்பட்ட கே. பாக்யராஜ் இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறையினர் மற்றும் அரசியல் முகங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கே. பாக்யராஜ் பலராலும் போற்றப்படக்கூடிய ஒரு மாமனிதர்.

இவர், ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோயில் கிராமத்தில் 1953ல் பிறந்தார். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் '16 வயதினிலே' திரைப்படத்தில் உதவி இயக்குனர்க திரைத்துறைக்குள் நுழைந்தார். இவரை "திரைக்கதைகளின் மன்னன்" என்று அழைக்கப்படுகிறார். காரணம், இவரது படங்கள் அவ்வாறு இருக்கும். இவரது 'முந்தானை முடிச்சி' திரைப்படம், நகைச்சுவையாக பார்க்கப்பட்டாலும், அது திருமணத்தில் உள்ள உள்ளார்ந்த விஷயங்களை பற்றி பேசுவதாக இருக்கட்டும், 'சின்ன வீடு' திரைப்படத்தின் வாயிலாக தவறுக்காக உறவை முறித்துக்கொள்வது என்பது தீர்வல்ல என்றும், அழகாக, கவிதையாக பார்க்கப்பட்ட குடும்ப வாழ்வு, காதல் வாழ்வு கே. பாக்யராஜின் பார்வையால் பார்த்த போது அதில் உண்மையாகவே இருக்கும் சிக்கல்கள், மனஸ்தாபங்களை எல்லாம் எந்த திரையும் இல்லாமல் காட்டியிருப்பார்.

மேலும், கே. பாக்யராஜ் பலரின் வாழ்க்கையை மாற்றியுள்ளார். அதிலும் குறிப்பாககவுண்டமணி, செந்தில். காமெடி நடிகர் செந்தில் நாடக கம்பெனியில் எடுபுடியாக வேலை செய்துவந்துள்ளார். அப்போது அவரை 'இன்றுபோய் நாளை வா' என்ற திரைப்படத்தின் வாயிலாக முதல் முறை வசனம் பேசி நடிக்கவைத்துள்ளார். அதன் பின்பு கவுண்டமணி, மணி நாடகங்களில் 'கவுண்டர்' கொடுப்பதால் வல்லவர் என்பதால் அவரை பலரும் 'கவுண்டர் மணி' என்று அழைத்துள்ளனர். பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்தபோது தவறுதலாக 'கவுண்டமணி' என்று குறிப்பிட அதுவே பட்டிதொட்டியெங்கும் ஒலிக்கும் ஒரு பெயராக மாறியது.

16 வயதினிலே படத்திற்கு பின்னர் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காமல் இருந்த கவுண்டமணிக்கு பாக்யராஜ் உதவி இயக்குனராக இருந்தபோது 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படத்தில் ஒரு வாய்ப்பினை பெற்று கொடுத்தார். அதுதான் கவுண்டமணி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. எழுத்துலகினைத் தாண்டி இவர் இசையுலகிலும் கால்பதித்துள்ளார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன், சங்கர் - கணேஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் 1989ம் ஆண்டு வெளியான 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரமெடுத்தார், மேலும், அந்த திரைப்படத்தின் 'அம்மாடி இதுதான் காதலா' மிகப்பெரிய ஹிட் அடித்தது.

கே. பாக்யராஜ் முதல்முறையாக வசனம் எழுதிய திரைப்படம்தான் கமல், ஸ்ரீதேவி நடித்த 'சிகப்பு ரோஜாக்கள்'. ஆனால், இயக்குநர் பாரதிராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரது பெயர் இடம்பெறாமல் போனது. மேலும், பாக்யராஜ் மிகுத்து கொண்ட அன்பின் காரணத்தால் மறைந்த அதிமுக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவரை தன்னுடைய கலையுலக வாரிசாக அறிவித்தார். பாக்யராஜ் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் கண்கள் தானமாக வழக்கப்பட்டுள்ளது. உடலால் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவரின் கண்கள் இந்த உலகை பார்த்துக்கொண்டேதான் இருக்கப்போகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com