

இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் உருவாகியுள்ள “ஜெயிலர் 2” திரைப்படம் பெரும் ஏதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் அக்டோபர் 15ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ட்ரெய்லர் வெளியான பிறகு, தனக்கே உரித்தான தனது ஸ்டைலுக்கு சற்றும் பஞ்சமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலக்குவார் என கணிக்கப்பட்டது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த்,மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ்குமார் மற்றும் SJ சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’ஜெயிலர் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வெகுநாட்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி ஆக்ஷன் அவதாரத்தில் களமிறக்கிய படம் ஜெயிலர் முதல் பாகம், அதே போல் ஜெயிலர் 2 -ம் இருக்கும் என தெரிகிறது. மேலும் இதில் நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளது என்பதால், 'டபுள் ட்ரீட்' ஆக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்திற்கான முன்பதிவுகள் அக்டோபர் 10 தொடங்கி அதிவேகமாக மைல்கற்களை கடந்து வருகிறது. இந்த மாஸ் ஆக்ஷன் த்ரில்லர் படம் முதல் முன்பதிவிலையே ₹ 20 கோடியை தாண்டிவிட்டது, இந்த ஒரு பிரம்மாண்டமான தொடக்கம் பெரிய வசூல் அடிக்கும் என்பதற்கான அறிகுறியாக தெரிகிறது.
கேரளாவில், ஒரு நாள் தாமதமாக, அக்டோபர் 11 அன்று காலையில் முன்பதிவுகள் தொடங்கின. இருபினும் வசூலில் தமிழகத்தை விஞ்சும் அளவிற்கு முன்பதிவு இருந்துள்ளது. மேலும் 'ஜெயிலர் 2' படத்திற்கான முன்பதிவில், சென்னை மட்டும் ₹ 1.63 கோடியை ஈட்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ஒரே நாளில் இரண்டு முறை ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்த அவர், ‘ஜெயிலர் 2’ மிகச் சிறப்பாக வந்துள்ளதாகத் தெரிவித்திருந்தார். பின்னர், அதே நாள் இரவில் கலாநிதி மாறன் மற்றும் தனது குடும்பத்தினர் ரஜினிகாந்துடன் மீண்டும் படத்தை பார்த்துள்ளார். இதன் மூலம் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது தெரிகிறது.
இதற்கு முன்பு, ‘ஜெயிலர்’ முதல் பாகம் உலக அளவில் வசூல் சாதனை படைத்ததைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோருக்குச் சொகுசு கார்களைப் பரிசாக வழங்கினார். தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படக்குழுவினர் மீண்டும் பரிசுகளைப் பெறலாம் என்ற பேச்சுகள் இணையத்தில் எழ தொடங்கியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்