"கருப்பன் வாரான்" - இன்று திரைக்கு வருகிறது 'கருப்பு!' சூர்யா தனது X தளத்தில் கூறியது என்ன?

'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளை வெளியாவதாக நடிகர் சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
கருப்பு திரைப்படம்
கருப்பு திரைப்படம் கருப்பு திரைப்படம்
Published on
Updated on
1 min read

'கருப்பு' திரைப்படம் நேற்று வெளியாகவிருந்த நிலையில் நிதி தொடர்பான பிரச்சனையால் வெளியாவதில் சிக்கல் நீடிப்பதாக கருப்பு திரைப்படத்தின் இயக்குநர் RJ பாலாஜி தனது சமூக வலைதளபக்கத்தில் கண்ணீர் மல்க காணொளியை வெளியிட்டார். RJ பாலாஜி இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை திரிஷா நடிப்பில் சாய் அபியங்கர் இசையில் வெளியாகவிருந்த திரைப்படம்தான் 'கருப்பு'. இத்திரைப்படம் மே 14, 2026 அன்று வெளியாகும் என்று படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஆர்வத்துடன் திரைப்படத்தைக் காண காத்திருந்தனர். இந்நிலையில், நேற்று அத்திரைப்படத்தின் இயக்குநரான RJ பாலாஜி, தனது சமூகவலைதளபக்கத்தில் "இன்று மாலைக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் வெளியாகவில்லை. இன்று மே 14-ல் 'கருப்பு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும், மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தேன். இன்று மாலைக்குள் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து இந்த திரைப்படத்தை இறைவன் வெளியாக வைப்பார். திரைப்படம் தாமதமாவதற்கு வருந்துகிறேன்", என்று கூறி மன்னிப்பு வேண்டினார். மேலும் நேற்று மாலைக்கு திரைப்படம் வந்துவிடும் என்று கூறிய நிலையில் இன்று காலை வெளியாவதாக 'கருப்பு' திரைப்படத்தின் நடிகர் சூர்யா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். "எங்களோடு ஆதரவாக உடன் இருந்தவர்களுக்கு நன்றி, இன்று படம் வெளியாகும்" என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.

பெரிய திரைபட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்காக 36 மாதங்கள் உழைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் வெளியாவதற்கு பல தடைகள் இருந்தது. மேலும் படம் வெளியாவது குறித்து வதந்திகளுக்கு பரவிய வண்ணமே இருந்தது. அனைத்தையும் கடந்து 'கருப்பு' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வரவுள்ளது என்று படக்குழு சார்பாக கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com