கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட RJ பாலாஜி! 'கருப்பு' திரைப்படம் தள்ளிபோகிறதா? - தொடரும் இடையூறுகள்

கருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு கட்சிகளுக்கு அனுமதியளித்திருந்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
கருப்பு
கருப்பு கருப்பு
Published on
Updated on
1 min read

இன்று காலை RJ பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கு 'கருப்பு' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது 'கருப்பு' திரைப்படம் இன்று மாலை வெளியாகும் என்று கண்ணீர் மல்க ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா, நடிகை திரிஷா நடிப்பில் இன்று திரையரங்கில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட 'கருப்பு' திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், புதிய அரசாங்கம் கருப்பு திரைப்படத்திற்கு இன்று காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், படம் இன்று வெளியகத்து என்று வதத்திகள் நேற்றே பரவிய நிலையில், "கருப்பன் நம்முடன் இருப்பான். இதற்காக 36 மாதங்கள் நாங்கள் கடிமக உழைத்துள்ளோம். அதனால் கண்டிப்பாக இத்திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகும்" என்று நேற்று RJ பாலாஜி தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். திரைப்படம் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகிறது. மேலும், தவிர்க்கமுடியாத சில காரணங்களால் 'கருப்பு' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியாகாது என்று தற்போது கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து RJ பாலாஜி இது குறித்து கண்ணீர் மல்க ஒரு வீடியோ ஒன்றினை வெளியுள்ளார். "இன்று மாலைக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளியாகவில்லை. இன்று மே 14-ல் கருப்பு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும், மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்தேன். இன்று மாலைக்குள் அனைத்து பிரச்சனைகளையும் முடித்து இந்த திரைப்படத்தை இறைவன் வெளியாக வைப்பார். திரைப்படம் தாமதமாவதற்கு வருந்துகிறேன், உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். அதற்கெல்லாம் சேர்த்து இன்று மாலைக்குள் திரைப்படம் வெளியாகும். கறுப்பன் வாரான் வழி மறிக்காதீர்கள் என்று கூறுவேன் ஆனால், நிறைய பேர் வழி மறித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரைப்படத்தின் தாமதத்திற்காக மனம் வருந்துகிறேன். இன்று மாலை வரும் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கு திரைப்படம் பிடிக்கும் நேற்றும் நம்புகிறேன்" என்று அந்த காணொளியில் கருப்பு திரைப்படத்தில் இயக்குநரான RJ பாலாஜி பேசியுள்ளார்.

மேலும், கருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு கட்சிகளுக்கு அனுமதியளித்திருந்த நிலையில் தற்போது திரைப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வருகிறது. மேலும், இத்திரைப்படம் இன்று மாலை வெளியாகுமா? என்ற சந்தேகமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com