கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் டோரதி.
இந்த படத்தில் தமிழ்சினிமாவில் இதுவரை பேசப்படாத கோணத்தில் அன்பும் பாலின சமத்துவமும் முன்நிறுத்தப்படுவதாக விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படம் ஓரினச் சேர்க்கை, LGBTQ+ ஆதரவாக எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி, சமூகத்தில் விவாதத்தை தொடங்கியிருக்கிறது.
இணையத்தில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவினருக்கு சிலர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்த வரும் சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் டோரதி படத்துக்கு பாசிடிவ் ரிவியூ கொடுத்து வாழ்த்தியுள்ளனர்.
டோரதி படத்தின் சினிமா மொழி மிக மிக நன்றாக, ஈர்க்கும் வகையில் உள்ளது. உண்மையிலேயே எனக்கு இவர் மீது பொறாமையாக இருக்கிறது. சினிமா மொழியின் மீதான கட்டுப்பாடு, காட்சி அமைப்புகள் மீதான கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் என அனைத்துமே மிக அற்புதமாக உள்ளது. இதனுடன் இளையராஜா சாரின் இசையும் சேரும்போது மிக மிக அற்புதமாக இருக்கிறது.
இது ஒரு புதிய விஷயமாக இருந்தது. என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என விவரிக்க முடியவில்லை. எல்லாரும் சிறப்பாக நடித்திருந்தனர். ராஜா சாரின் மியூசிக் எக்சலன்ட்.
இந்த படம் பாக்க பாரதி ராஜா சார் இல்லாமல போயிட்டாரே எனத் தோன்றியது... மண்சார்ந்த உருவாக்கத்தில் ரத்தமும் சதையுமான மனிதர்களை காட்டியிருந்த நிதானம்தான் அப்படித் தோன்ற காரணம்.
வழக்கமாக ஒரு காட்சி, ஒரு திரைக்கதை, ஒரு ஃபிலிம் மேக்கிங்குக்கு இலக்கணம் இருக்கும். அந்த பார்முலாவை இலக்கணத்தை எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் உடைத்திருக்கிறார் என்று சொல்ல முடியும்.. அடுத்த காட்சிகளை நம்மால் யூகிக்க முடியாத அளவு கொண்டு போயிருந்தார். ராஜா சார் இசையில் 70, 80-களில் இருந்த உயிரைப் பார்க்க முடிந்தது. ரிஷி, சனந்த் சிறப்பாக நடித்திருந்தனர்.
நீங்க எதிர்பார்க்கிற எதுவும் இல்லை, வேற லெவலில் பண்ணியிருக்கிறார். கார்த்தியின் படங்களில் சிறந்தபடம் ஜிகர்தண்டாவா? இறைவியா? என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருக்கும். இனி டோரதி தான்.
டோரதி மிக மிக உறுதியான ஒரு படம். இந்த மாதிரயான உள்ளடக்கத்தை எடுத்துவந்து பொது சினிமாவில் வெளியிட பெரிய தைரியம் வேண்டும். இதை சாதாரணமாக இல்லாமல் எமோஷனல் த்ரில்லராக செய்தது நம்மை என்கேஜ் செய்கிறது. இந்த படத்தில் ராஜா சாரின் இசையை நாம் கேட்பதில்லை, உணருவோம்.
ஒருபுறம் வாழ்த்துகள் இருக்க சிலர் எதிர்ப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இயக்குநர் மோகன் ஜி, "தமிழ் சினிமாவில் LGBT சமூகத்தினரை ஆதரிப்பது ஒரு கருத்தோ புரட்சியோ அல்ல. அது முற்றிலும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியால், இளைஞர்களை இன்ஃப்ளூயென்ஸ் செய்து நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் சிதைக்கிறது..." என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்