வாட்டர் ஃபாஸ்டிங் என்றால் என்ன? தண்ணிய வெச்சு உங்க உடலை சுத்திகரிப்பு செய்யுங்க…!

எடை இழப்பிற்கு நீர் விரதம் உதவுவதாக பலரும் சொல்லி வருகின்றனர். பல கலாச்சாரங்களில் மத அல்லது ....
water fasting
water fasting
Published on
Updated on
1 min read

நீர் விரதம் அல்லது வாட்டர் ஃபாஸ்டிங் என்பது, தண்ணீரை தவிர எதுவுமே உட்கொள்ளாமல் இருக்கும் ஒரு விரத முறையாகும். இந்த விரத முறை கிட்டத்தட்ட 24 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரம் வரை நீடிக்கலாம். 

எப்போதெல்லாம் நீர் விரதம் மேற்கொள்ளலாம்!

‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல’  என்னதான் நாம் வாய்க்கு ருசியாய் உண்டாலும் அது குடலுக்கு ருசிப்பதில்லை. மேலும் புரோட்டின் டயட் என்ற பேரில் நம் கலோரிகளை எரிக்க நம் உள்ளுறுப்புகளை பாடாய்படுத்துகிறோம். எப்படி தூக்கம்  மனித உடலில் இன்றியமையாத ஒரு தேவையோ அதேபோல நமது உடல் உறுப்புகள் பாதுகாக்கப்படுவதும் அவசியமாகிறது.

ஆகவேதான் சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் ஹெவியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என நமது முன்னோர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி நமது உடல் காலங்காலமாக இரவு என்றால், ஓய்வெடுக்க வேண்டும் என தனது மரபணுக்களில் பதிய வைத்துள்ளது. ஓய்வு புற உடலுக்கு மட்டுமல்ல அக உடலுக்கும் தான். 

 நீங்கள் வயிற்று அசௌகரியத்தை அடிக்கடி உணர்ந்தாள், மருந்து உண்டு, மருத்துவ குணங்கள் நிறைந்த உணவையும் உட்கொள்ளலாம் அனால் சமயங்களில் எதுவும் சாப்பிடாமல் வெறும் தண்ணீர் மட்டும் கூட பருகி பார்க்கலாம்.

எடை இழப்பிற்கு நீர் விரதம் உதவுவதாக பலரும் சொல்லி வருகின்றனர். பல கலாச்சாரங்களில் மத அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேலும் நாள்பட்ட நோய்களின் ஆபத்தை குறைக்க நீர் விரதம் மேற்கொள்ளலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தண்ணீர் விரதம் உங்கள் உடலில் உள்ள ஆட்டோபேஜியை தூண்டக்கூடும், இதன் காரணமாக உங்கள் உடலில் உள்ள நாள்பட்ட நஞ்சுகள் கரைந்து உங்கள் உடல் சுத்தீகரிக்கப்படும். உங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த செல் பாகங்கள் உடைந்து மறுசுழற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஆனால் இது எல்லாருக்கும் ஏற்புடையது அல்ல, உங்கள் உடலின் தன்மை மற்றும் மருத்துவர் ஆலோசனையின்றி நீங்கள் இதை மேற்கொள்வது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com