"தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத".. அமெரிக்க ஆவி படத்தை புகழ்ந்து தள்ளிய தனஞ்செயன்! என்னங்க சொல்றீங்க!

முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றிருப்பதோடு, ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்திருப்பதாகவும் என்றும் கூறப்படுகிறது.
America Aavi movie
America Aavi movie
Published on: 
Updated on: 
1 min read

நெப்போலியன் நடித்து வெளியான 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தினை திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தனஞ்செயன் தனது சமூகவலைதளபக்கத்தில் இந்த திரைப்படத்தினைக் குறிப்பிட்டு பாராட்டி எழுதியுள்ளார்.

'அமெரிக்க ஆவி' திரைப்படம்:

நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த அமெரிக்க ஆவி திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முக்கியமான முதன்மையான கத்பாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும், இந்த திரைப்படமானது 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இதில் நடித்த அனைத்து நடிகர்களும் அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த திரைப்படத்தினை சக நடிகர்கள் கொடுத்த நேரத்தினை முறையாக பயன்படுத்த வெறும் 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையை இந்த திரைப்படம் பெற்றிருப்பதோடு, ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் நடித்திருப்பதாகவும் என்றும் கூறப்படுகிறது.

ஆதிஷ் உத்ரியன் இசையில், தஞ்சை ஜேபிஆர் இயக்கத்தில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படமானது 2026-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமான தேதி குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

பாராட்டு மழையில் 'அமெரிக்க ஆவி':

இந்த திரைப்படத்தினை பார்த்த திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் மற்றும் BOFTA Film Institute-ன் நிறுவனரான தனஞ்செயனால் பாராட்டப்பட்டுள்ளது. அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில் இந்த திரைப்படத்தினை குறித்து புகழ்ந்துள்ளார். அவர் தனது டிவீட்டில், அமெரிக்க ஆவியை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நெப்போலியன் சார் மற்றும் குழுவினரே, முழுக்க முழுக்க அமெரிக்காவில் உள்ள அழகான இடங்களில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இதுவரை தமிழ் படங்களில் காணப்படாத ஒரு விசித்திரமான, திகில் கலந்த நகைச்சுவைப் படம். இந்த ஜாலியான படத்தைப் பார்த்து ரசித்தேன். நெப்போலியன் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று அவரை தெரிவித்துள்ளார்.

தனஞ்செயனால் தயாரிக்கப்பட்ட பூ, கண்டேன் காதலை, முகமூடி, அஞ்சான், இறுதிச்சுற்று, காற்றின் மொழி போன்ற திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.