

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிப்பில் நவம்பர் 20 வெளியாகியுள்ள ஓம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் செம்மரக் கடத்தல் நெட்ஒர்க்கை முறியடிப்பதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘ஸ்பை த்ரில்லர்’ திரைப்படம் என்று சொல்லபடுகிறது. இந்த மாதிரி படம் தான் நிறைய இருக்ககே, புஷ்பா 1, 2 னு எடுத்து வச்சிருக்காங்களே அப்புறம் என்ன? அப்படி தானே தோணுது. இதுல என்ன வித்தியாசமான கதை என்றால், இவ்வளவு வந்த படமெல்லாம் செம்மரம் கடத்துவது, அதை விற்பது, அதில் நடக்கக்கூடிய அரசியல் அப்படினு பார்த்து இருப்போம். ஓம் படத்தில் முதல் முறையாக செம்மரம் வெட்டுபவர்களுக்கு பின்னாடி இருக்கக்கூடிய வலி, ஏன் செம்மரம் வெட்டுறாங்க, அவங்களுக்கு ஏன் வேற தொழில் இல்ல, இதில் ஏற்படக்கூறிய உயிரிழப்புகள் மற்றும் அதன் தாக்கங்கள் என பேசாத விஷயத்தை பேசி இருக்கு என்றே சொல்லலாம்.
செம்மரம் கடத்தக்கூடிய ஒரு கும்பலுக்கும் அதை எதிர்த்து ஒட்டுமொத்த செம்மர கடத்தலையும் தடுத்து நிறுத்த நினைக்கும் வனத்துறை மற்றும் காவல் துறைக்கும் நடுவில் நடக்கக்கூடிய ஒரு த்ரில்லர் டிராமா தான் இதோட கரு. இதில் காவல் துறையில் இருந்து ஒரு ஸ்பை கேரக்டரா ஒருத்தர், செம்மர கடத்தல் கும்பலுக்குள் வருகிறார். இந்த கடத்தல் கும்பலின் லீடராக இருப்பவர் தான் மம்முட்டி. அவரின் ரைட் ஹான்டாக மாற தனுஷ் முயற்சித்து, பின் நடக்கும் துரோகங்கள் மற்றும் இறுதியாக செம்மர கடத்தல் ஒழிக்கப்பட்டதா இல்லையா? என்பது தான் கிளைமாக்ஸ்.
படத்தின் பர்ஸ்ட் ஹாப், விறுவிறுப்பாக நகர்கிறது. இதில் சாய் பல்லவி நல்ல ஸ்கோர் பண்ணி இருக்காங்கன்னே சொல்லலாம். ஆனா செகண்ட் ஹாப், ரொம்ப ஸ்லொவா இருக்கு. ஜானர் மட்டும் தான் ஸ்பை த்ரில்லர், ஆனா ஸ்பை யாருனு எல்லோருக்குமே தெரியுற மாறியே கதை மூவ் ஆகுது. ஒரு ஸ்பை கேரக்ட்டருக்கு கொடுக்க வேண்டிய எந்த ஒரு அம்சமும் இதில் இல்லை. அந்த இடங்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம் என்றே சொல்லபடுகிறது. மேலும் திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கபடவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, இதற்கு முன் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் அமரன் என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார். அவர் தான் ‘ஓம்’ படத்தையும் இயக்கினாரா? என்று யோசிக்க வைக்கும் அளவிற்கு உள்ளாதாகவும் விமரசனங்கள் எழுகிறது. நடிகர் தனுஷ்-க்கு சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம், தனுஷ் நடிப்பில் ‘கர’ என்ற திரைப்படம் வெளியானது. இது வந்ததும் தெரியவில்லை போனது தெரியவில்லை என்ற நிலையில், காணாமல் போனது. அந்த படத்தை குறித்து எந்த, பேச்சும் வரவேற்பும் பேசும்படி இல்லை.
ஓம் படம் நல்ல காம்பேக் கொடுக்கும் என காத்திருந்த தனுஷ் ரசிகர்களுக்கு மீண்டும் அதே நிலைமை தான் போல் இருக்கிறது. தனுஷ் படங்கள் தொடர்ந்து அவர்களை ஏமாற்றி வருவதாகவே தெரிகிறது. இந்நிலையில் மீண்டும் வடசென்னை, ஆடுகளம் போன்ற மாஸ் படங்கள் கொடுத்தால் மட்டடுமே காப்பாற்ற முடியும் என்ற நிலைமை உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. வெற்றி மாறன் தற்போது சிம்பு நடிப்பில் அரசன் படத்தில் பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.