"உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை.." கவனம் பெறும் நடிகையின் 'ட்வீட்!' யாரை குறிவைக்கிறார் நிவேதா பெத்துராஜ்?

நடிகை நிவேதா பெத்துராஜ் தனது X தளத்தில் திருக்குறள் ஒன்றினை பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Nivetha Pethuraj X post
Nivetha Pethuraj X post
Published on
Updated on
2 min read

தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகார போராட்டத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடிகை குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசிய நிலையில் அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சிலர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவரது கைதிற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். தவெக-வினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது X தளத்தில் திருக்குறள் ஒன்றினை பதிவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக நடிகை குறித்து பேசியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கிட்டத்தட்ட 9 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த தவெக மகளிர் அணி தலைவி, பைரவி தஞ்சாவூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று காலை (04/08/26) காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் கைதிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி, அதிமுக ஐடி விங், கனிமொழி, பிரேமலதா விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ், தங்கம் தென்னரசு, மாரிதாஸ், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது X தளத்தில் திருக்குறள் ஒன்றினை பதிவிட்டுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர், "புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கம் தரும் - திருக்குறள் 183" என்று பதிவிட்டுள்ளார்.

Nivetha Pethuraj X post
Nivetha Pethuraj X post

இதன் பொருள், பிறர் இல்லாத இடத்தில் அவரைத் தூற்றிப் பேசிவிட்டு, நேரில் பார்க்கும் போது அவரிடம் பொய்யாக அன்பு காட்டி உயிர்வாழ்தலை விட, அவ்வாறு வாழாமல் இறந்துவிடுவது நல்லது. அதுவே அறநூல்கள் கூறும் உயர்வான நன்மையைத் தரும். இது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தையும், சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர், தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.” என்கிற குறளை நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்த மே மாதம் 14ம் தேதி பதிவிட்டதும் கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்போது உதயநிதி ஸ்டாலின் கைது விசாரணையானது இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com