கவியரசனுக்கு "ஞானபீட விருது..." - வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்!

நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்...
கவியரசனுக்கு "ஞானபீட விருது..." - வாழ்த்துகளை தெரிவித்த முதலமைச்சர்!
Published on
Updated on
2 min read

சினிமாவில் பாடல் என்றலோ அல்லது கவிதை என்றாலோ உடனே நினைவில் ஹைக்கூ போல வந்துவிடுபவர்தான் கவிஞர் வைரமுத்து. தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியராகவும், கவிஞராகவும் திகழும் அவர், சிறந்த பாடலாசிரியருக்காக ‘ஆறு முறை தேசிய விருதும்’, ‘கலைமாமணி விருதும்’, ‘பத்மஸ்ரீ விருதும்’ பெற்ற இந்திய தமிழ்க் கவிஞர். ‘கவியரசு’ என்றும், ‘கவிப்பேரரசு’ என்றும், ‘காப்பியப்பேரறிஞர்’ என்றும், பட்டங்கள் பெற்றுள்ளார் வைரமுத்து.

வைரமுத்து அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திலிருக்கும் வடுகப்பட்டியில் ஜூலை 13 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் ராமசாமி , அங்கம்மாளுக்கும் மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். 10 வயதில் கவிதை எழுதத் தொடங்கிய இவர் பாரதியார், கண்ணதாசன் ஆகியோரால் ஈர்க்கப்பட்டார். பச்சையப்பா கல்லூரியில் தமிழில் B.A, மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் M.A பட்டம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். 19 வயதில் வைகரை 'மேகங்கள்' என்ற கவிதைத் தொகுப்பைப் வெளியிட்டார்.

மேலும், கவிஞர் வைரமுத்து இதுவரை 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வென்றுள்ளார். அதுபோல, ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’ நாவலுக்கான 2003-ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். இவருக்கு 2014-ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு இப்போது ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞானபீட விருது:

வாழ்நாள் முழுமைக்குமான இலக்கியப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஞானபீடம் விருது வழங்கப்படுகிறது. தமிழில் இதுவரை 2 பேர் மட்டுமே இந்த விருதை பெற்றிருக்கின்றனர். இதற்கு முன்னர் கடந்த 1975ம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், அவரை தொடர்ந்து கடந்த 2002ம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் இந்த விருதை பெற்றிருக்கின்றனர். இந்த விருது 1962ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிகவும் பழமையான இலக்கிய விருதுகளில் இதுவும் ஒன்று. இதனை பாரதிய ஞானபீடம் அறக்கட்டளைதான் இந்த விருதுகளை வழங்கி வருகிறது. இவ்விருதிற்கு பரிசுத்தொகையாக ரூ.11 லட்சம் பணமும், சரஸ்வதி தேவியின் வெண்கலச் சிலை, மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது.

முதலமைச்சர் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ஞானபீட விருது வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தனது x பக்கத்தில், "தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது! காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது! தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com