

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா. தற்போது இவர்களுக்கு இடையே காசோலை மோசடி குறித்த மோதல் நிலவி வருகிறது. தனது அக்கா அம்பிகா ரூ.46 கோடி அளவில் செக் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் 21ம் தேதி நடிகை ராதா புகார் அளித்திருந்தார். இந்த செய்தி திரைத்துறையில் பராபரை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் தான் மீதான காசோலை மோசடி புகாருக்கு விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அம்பிகா. அதில் “ராதா என் மீது அளித்துள்ள புகார் உண்மைக்கு புறம்பானது” என்றும் “காசோலை மோசடி செய்ததற்காக ராதா மீது நான்தான் புகார் கொடுத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
மேலும் “எனது சகோதரி ராதாவுக்கு தங்கம் என்றாலே வீக்னெஸ் தான்.. என்னுடைய ஏராளமான தங்க நகைகள் ராதாவிடம் தான் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் சொத்து பிரித்ததில் அம்பிகாவிற்கு ராதா இன்னும் ரூ.97 கோடி தர வேண்டியுள்ளது என்றும் பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார். “ஏ.ஆர்.எஸ். கார்டன் எங்கள் உழைப்பில் வாங்கியது.. அதில் எனக்கும் பங்கு உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
முதலில் ARS கார்டன் இருந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை, அம்பிகாவின் பெயரில் மாற்ற அவரின் அம்மா பரிந்துரைத்ததாகவும், ஆனால், ராதா அவருடைய பெயரை வைத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அம்பிகா, சகோதரி ராதா மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை முன்வைத்தார். அதில் “ ARS கார்டனுக்காக கஷ்டப்பட்டது நான். அதில் ஒரு ஷேர் விஷயமா நாங்க அவங்க கிட்ட பேசுனோம். அதுக்கப்புறம் ARS ப்ரொடக்ஷன் கம்பெனி இருக்கு. அதுல எனக்கு ஒரு ஷேர் இருக்கு. என்னோட தங்கையை பொறுத்தவரைக்கும் கோல்ட் பார்த்தாலே அவங்க ஒரு மாதிரி ஆயிடுவாங்க. அது அவங்களுக்கு ஒரு வீக்னஸ் மாதிரி.. நிறைய கோல்ட் என்னோடது அவங்ககிட்ட இருக்கு.
ராதா பொருட்கள் மற்றும் காசோலை திருடுபோய் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனா அவர் பேக்-க்கு லாக் போடும் ஆளு. ஒரு சின்ன விஷயமா இருந்தாலும் கேர்புள்ளா இருக்கிற ஆளு. இப்போ கொடுத்துள்ள புகார்.. தப்பு அவங்களே பண்ணிட்டு முந்திக்கிற மாதிரி அவங்களே கொடுத்துள்ளனர். செக்கு கொடுத்தது அவங்க ஸ்டாப் பண்ணது.. பவுன்ஸ் ஆனது அவங்களால.. காசு போனது எனக்கு” என்றும் தெரிவித்தார். மேலும் அனைத்து புகார்களையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என்று தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்