கரண்ட் போயிடுமோ? மின்வெட்டு பயத்தால்.. அமைச்சர் வருவதற்கு முன்பே ரெடியான ஜெனரேட்டர்!

தொடர்ந்து தமிழகத்தில் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் இது போல் நடப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது
Minister Farvas
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பது, மழைநீர் தேங்கும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, பேரிடர் சூழ்நிலைகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. ஆய்வுக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களிடமும் அமைச்சர் முகமது பர்வேஸ் கேட்டறிந்தார். 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான அனைத்து துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு ஆய்வுக் கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டால் அதனை சமாளிக்க தனியார் நிறுவனத்தில் இருந்து 148 கிலோ வாட்ஸ் கொண்ட பெரிய அளவிலான ஜெனரேட்டர் கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் ஆட்சியர் அலுவலகத்தில் இணைப்பு கொடுத்து மின்தடை ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று தஞ்சாவூர் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், மாணவ மாணவி மத்தியில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு வழங்க முயற்சி செய்தனர். ஆனால் அதுவும் பழுது காரணமாக மின் இணைப்பை கொடுக்க முடியவில்லை. இதனையடுத்து தொடர்ந்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக மின்வெட்டில் அமைச்சர் விஸ்வநாதன் மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். ஆனால் அவர் பேசிய எதுவும் மாணவ மாணவிகளுக்கு கேட்காத காரணமாக அங்கு சிறிது குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. அமைச்சர் பேசி முடிக்கும் வரை மின்சாரம் இல்லை. மேலும் வேலூரில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பினாகி பெற்ற நிகழ்விலும் இதே போல் மின்வெட்டு ஏற்பட்டது.

தொடர்ந்து தமிழகத்தில் மின்வெட்டு நிலவி வரும் நிலையில், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளிலும் இது போல் நடப்பது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதனால் அமைச்சர் முகமது பர்வேஸ் பங்கேற்ற இந்த நிகழ்வில் முன்கூட்டியே ஜெனரேட்டர் மூலம் மின் இணைப்பு செய்ய ஏற்பாடுகள் நடந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com