"இன்னும் 10, 15 வருஷம் இருந்துட்டு போயிடுவேன்.." - ரஜினியிடம் தேவா சொன்ன வார்த்தைகள்.. உருக்கமாக வீடியோ வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், தேவா உடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
Rajinikanth Shares Emotional Video and Fond Memories of Late Composer Deva
"இன்னும் 10, 15 வருஷம் இருந்துட்டு போயிடுவேன்.." - ரஜினியிடம் தேவா சொன்ன வார்த்தைகள்.. உருக்கமாக வீடியோ வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!
Published on: 
Updated on: 
2 min read

இசையமைப்பாளர் தேவா இன்று காலையில் காலமான நிலையில் பல்வேறு திரைத்துறை மற்றும் அரசியல் பிரமூகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட அவர், தேவா உடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

எல்லாமே சக்சஸ்

"என் அருமை நண்பர் இசையமைப்பாளர் தேவா, அவருடைய திடீர் மறைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனை அளிக்கிறது. அவர் என்னுடைய மூன்று படங்களுக்கு மியூசிக் பண்ணாங்க. அண்ணாமலை, பாஷா, அருணாச்சலம். மூணும் மிகப்பெரிய சக்சஸ்." என்றார்.

சொக்கத்தங்கம் தேவா

மேலும் பேசிய அவர், "அதுக்கப்புறம் வந்து படையப்பா எடுக்கும்போது, சில நண்பர்கள் எல்லாம், "அதுக்கு ஏ.ஆர். ரஹ்மான் பண்ணனும்"னு சொல்லும் போது, நான் அரை மனசோட, தேவா கிட்ட போய், "இந்த மாதிரி படையப்பாபடத்துக்கு வந்து, நான் ஏ.ஆர். ரஹ்மானை வைத்து பண்ணலாம்னு நினைக்கிறேன்"ன்னு சொல்லும்போது, அவர் எந்திரிச்சு நின்னு, என் கையைப் பிடிச்சு, "ரொம்ப அழகா பண்ணுங்க"ன்னு சொன்னார். "இல்ல நீங்க தப்பா நினைச்சிக்க கூடாது.." என சொன்னபோது, "சார், நல்லா பையன், புதுசா வந்துட்டு இருக்காங்க, நல்லா பண்ணுங்க. ரொம்ப சந்தோஷம். இந்த மூணு படமும், உங்களது பண்ணதே அது பெரிய பாக்கியம்"ன்னு சொன்னாங்க.

இந்த மாதிரி ஒரு கள்ளம், கபடம், பொய், வஞ்சகம் இல்லாத, ஒரு அருமையான சொக்கத்தங்கம், தேவா அவர்கள்." எனப் புகழ்ந்தார்.

தனக்கென தனி பாணி..

தொடர்ந்து பேசிய அவர், "அவர் வாழ்க்கையில, ரொம்ப ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டாங்க. அஞ்சு தம்பிங்க, இவர்தான் மூத்தவரு. தெருத்தெருவா, கச்சேரி பண்ணி, கல்யாணத்துல எல்லாம் கச்சேரி வாசிச்சு, அந்த தம்பிங்க, குடும்பத்தை காப்பாத்துனாங்க. அதுக்கப்புறம் திரையுலகத்துல வந்து, பெரிய ஒரு இசையமைப்பாளர் ஆன பிறகு கூட, அந்த தம்பியை விட்டு கொடுக்கவே இல்லை, கூடவே வச்சிருந்தாங்க.

அந்த மாதிரி ஒரு அருமையான ஒரு குடும்பஸ்தர், ஒரு நல்ல மனிதர்.

இளையராஜா கொடிகட்டி பறக்குற காலத்துல கூட, தேவா அவர்கள் தனக்கென்று சொல்லி, ஒரு பாணியை உருவாக்கி, மிகப்பெரிய வெற்றி அடைஞ்சாங்க." என்றார்.

"இதே சந்தோஷத்துல வந்து இன்னொரு 10, 15 வருஷம் நான் வாழ்ந்துட்டு போயிடுவேன்"

சமீபத்தில் தேவா உடனான தருணங்கள் பற்றி பேசியவர், "ரெண்டரை வருஷத்துக்கு முன்னால வந்து, "எல்லாரும் கான்செர்ட் பண்ணிட்டு இருக்காங்க, நானும் பண்ணலாம்னு இருக்கேன். நீங்கதான் துவங்கி வைக்கணும்"னு சொன்னாங்க. நான் சந்தோஷமா போய் அதுல கலந்துகிட்டேன்.

அதுக்கப்புறம் வெளிநாடுகள்ல எல்லாம் அவர் கான்செர்ட் மிகப்பெரிய வெற்றி. ரொம்ப, ரொம்ப ரொம்ப பெரிய வெற்றி. பிறகு ஒருவாட்டி கான்செர்ட்லாம் சுத்தி முடிச்சுட்டு என்கிட்ட வந்து என்னை பாக்குறாங்க. "ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆச்சரியமா இருக்கு, யங்ஸ்டர்ஸ் எல்லாம் அந்த மாதிரி வந்து வரவேற்கிறாங்க. அவ்வளவு சந்தோஷமா இருக்கு ரஜினி சார். நான் வந்து இதே சந்தோஷத்துல வந்து இன்னொரு பத்து, பதினைஞ்சு வருஷம் நான் வாழ்ந்துட்டு போயிடுவேன்" அப்படின்னு என்கிட்ட சொன்னாங்க.

ஆண்டவன் நீ ரொம்ப நல்லவன்ப்பா. நீ சந்தோஷமா இருக்கும்போதே வந்து அப்படின்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டான் போல இருக்கு. அவங்க ஆத்மா சாந்தி அடையட்டும். அவங்க குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்." எனப் பேசியுள்ளார்.

Rajinikanth Shares Emotional Video and Fond Memories of Late Composer Deva
தேவா - விஜய் காம்போ.. ‘ஐயையோ அலமேலு’ முதல் 'தங்க நிறத்துக்கு' வரை.. முதலமைச்சரை முதன்முதலாக பாடவைத்த கதை தெரியுமா?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com