'கெனிஷா பிரிந்த நிலையில் கண்ணீருடன் ரவி மோகன்!' தற்கொலைக்கு முயன்றாரா? "3 எழுத்து இட்லி நடிகைக்கு எச்சரிக்கை"

கெனிஷா பிரிந்த நிலையில் ரவி மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் சந்தித்து பேசினார்.
Ravi Mohan press meet
Ravi Mohan press meetRavi Mohan press meet
Published on
Updated on
2 min read

நேற்று கெனிஷா ரவி மோகன் குறித்தும் அவரைக் குறித்தும் வெளிட்ட வீடியோவைத் தொடர்ந்து அதை தனது சமூக வலைதளபக்கத்தில் இருந்து நீக்கிவிட்டு, சென்னையை விட்டும், இசையை விட்டும், ரவி மோகனை விட்டும் விலகுவதாக கெனிஷா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், ரவி மோகன் இன்று செய்தியாளர்களை சந்தித்து கண்ணீருடன் பேசினார்.

அதில் அவர், 2 வருடங்கள் தான் அமைதியாக இருந்ததற்கு காரணம் உண்மை வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத்தான்என்று கூறினார். "நானும் பெண்ணியவாதிதான், பெண்ணியம் என்றால் நீங்கள் என்னவென்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார் ரவி மோகன். "14 வருடங்கள் என்னை பேசவே விடவில்லை. என் குழந்தைகளை பார்க்கவிடவில்லை. கடைசியாக 'டிக் டிக்' திரைப்படம் என் மகனுடன் நடிக்கும் போதுதான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் குழந்தைகளை எப்படி விடுவேன் நான்?.. பாசத்தை பற்றி என்னிடம் பேசாதீர்கள். என் குழந்தைகளை பார்க்கவிட மாட்டிக்கிறார்கள். பள்ளிக்கு குழந்தைகளுடன் பாடிகாட்கள் அனுப்பப்படுகிறார்கள். என்னுடன் போன் பேச அனுமதிக்கவில்லை. அவர்களை தயாரிப்பாளராகியதே நான்தான் என்னைப்பார்த்து, எப்படி படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறார் என்று பார்க்கிறேன்? என்று கூறுகிறார்கள். என்னை சீண்ட நினைத்தால் சும்மா இருக்கமாட்டேன்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ரவி மோகன் உச்சகட்ட கோபத்தில் பேசினார்.

முக்கியமாக 'சைபர் புல்லிங்' பற்றி பேசினார். மேலும், "என்னை புரிந்து ஒரு பெண் என்னோடு இருந்தார். அவரையும் அனுப்பி விட்டீர்கள். எங்கிருந்தாலும் அவர் நன்றாக இருப்பார். அதற்கு முக்கிய காரணம் சைபர் புல்லிங், அதற்கு காரணமானவர்களை சும்மா விடமாட்டேன்" என்று கட்டமாக பேசினார். இதனையடுத்து, தனக்கும் ஆர்த்திக்கு விவாகரத்து கிடைக்கும் வரை திரைப்படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார். ஆர்த்தியை பிரிந்து வரும்போது எதுவும் இல்லாமல் வந்ததாகவும், தற்போது அவர் வாடகை வீட்டில் இருப்பதாகவும், அவர்கள் நன்றாக இருப்பதாகவும் ஆதங்கத்துடன் பேசினார். "என்ன பேசினாலும் நான் அமைதியாக இருக்கவேண்டும் கேட்டால் நான் பிரபலம். தேவையில்லை அந்த இமேஜ். முதலில் நான் மனிதன். ஒரு கஷ்டம் வரும்போதுதான் அவனோடு யார் இருப்பார்கள் என்று தெரியும். அப்போது என்னுடன் இருந்தவர்தான் கெனிஷா" என்று கண்ணீர் மல்க கூறினார். அடுத்தடுத்து ஆதாரங்கள் வருவதாகவும் ரவி மோகன் கூறியுள்ளார். விவாகரத்தை ஒரே நாளின் முடித்திருக்க முடிந்திருந்தும் தன் குழந்தைகளுக்காக பார்த்ததாக அவர் கூறினார்.

தனக்கென்று ஒரு தனி வங்கிக்கணக்கு கூட இல்லை என்றும், தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்தால் பல கேள்விகள் ஆர்த்தி கேட்பார் என்றும் அவர் கூறினார். அவர்களுக்கு தான் உயிருடன் இருக்கக்கூடாது என்றும், அது விரைவில் நடக்கும் என்றும் ஆனால் எல்லோரையும் முடித்துவிட்டுதான் தான் செல்வேன் என்றும் அவர் ஆவேசத்துடன் கூறினார். 3 எழுத்து இட்லி நடிகை தன் வாழ்க்கையை குறித்து பேசுவதாகவும். அவர் அவ்வாறு பேசுவதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை என்றும் பேசினார். மேலும், தனக்கு பில்லி, சூனியம் வைப்பதாகவும் அதனால் தான் இரத்தவாந்தி எடுப்பதாகவும் அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறினார். 4 வருடங்களாகவே தான் ஆர்த்தியையும் அவரது குடும்பத்தையும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், இதற்கு முன்பு வரை ஹோட்டல்களில் தங்கி வந்ததாகவும் அவர் கூறினார். மேலும், அவரது குழந்தைகளை பார்க்கவிடாத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறியுள்ளார். ஆர்த்தி கையை அறுத்து கொண்டு மிரட்டித்தான் தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், திருமணமான முதல் நாளில் இருந்தே தனக்கு அநியாயங்கள் நடப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், கெனிஷாவிற்கு எது நடந்தாலும் அதற்கு ஆர்த்தியும் அவரின் குடும்பமும்தான் பொறுப்பு என்றும் அவர் கூறியுள்ளார். இதோடு அனைத்தையும் நிறுத்திக்கொள்ளும்படி எச்சரிக்கை விடுப்பதாகவும் ரவி மோகன் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com