நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த சமந்தா! ஒரே இன்ஸ்டா ஸ்டோரி-யால் தீயாய் கிளம்பிய விவாதம் - அப்படி என்ன சொன்னாங்க சாம்

பாலியல் தொழிலாளர்கள் தவறாகப் பார்க்கப்படும் இந்த உலகில், அவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதில்லை.
Samantha Instagram Story
Samantha Instagram Story
Published on: 
Updated on: 
1 min read

நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்டோரி தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. திரைப்பட தயாரிப்பாளரான ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இவர் தற்போது கர்ப்பத்தின் காரணமாக திரைப்படத்துறையில் இருந்து ஓய்வெடுத்திருந்தாலும், சமூகவலைதளபக்கத்தில் அவரது புகைப்படங்களையும், சில கருத்துக்களையும் பதிவிட்டு ரொம்பவே ஆக்டிவாகவே இருந்து வருகிறார். குறிப்பாக, அவ்வப்போது சமந்தா பெண்களுக்கு ஆதரவாக பேசியும் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர், "நம்மால் இன்னும் மாற முடியும். பாலியல் தொழிலாளர்கள் தவறாகப் பார்க்கப்படும் இந்த உலகில், அவர்களைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் மீது குற்றம் சாட்டப்படுவதில்லை. தனியாக குழந்தையை வளர்க்கும் பெண் விமர்சிக்கப்படும் இடத்தில், பொறுப்பற்ற தந்தையர்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்கப்படுகிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. உண்மையை தைரியமாக வெளியே பேசுபவர்கள் தவறாகச் சித்திரிக்கப்படுகிறார்களே தவிர, அதை மூடி மறைப்பவர்கள் அந்தத் துயரத்தை அனுபவிப்பதில்லை" எனத் தன் ஆதங்கத்தை கூறியதோடு, சமூக மாற்றதை எதிர்நோக்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்பு நடிகை சமந்தா நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பள ஏற்றத்தாழ்வு குறித்தும் மிகவும் வெளிப்படையாகவே பேசியிருந்தார். அதில் அவர், "நான் நடித்த பல படங்களில், ஏன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரே எண்ணிக்கையிலான நாட்களுக்கும், ஒரே கதாபாத்திரத்திற்கும் கணிசமாக வேறுபட்ட சம்பளம் வழங்கப்படுகிறது.

பெரிய படங்கள் கதாநாயகனை மையமாகக் கொண்டவை என்றும், கதாநாயகனுக்காகதான் பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள் என்றும் நான் புரிந்துகொள்கிறேன். இரண்டிற்கும் இடையே ஒரு வேறுபாடு இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும், கதாபாத்திரம் சமமான சவால்களைக் கொண்டிருந்த படங்களிலும்கூட, வேறுபட்ட சம்பளம் வழங்கப்படுகிறது" என்று அவர் முன்பு பேசியிருந்ததும் சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com