

தெலுங்கு மற்றும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை மதுமிதா. இவர் நடிப்பில் விஜய் டிவியில் வெளியாக்கிக் கொண்டிருக்கும் அய்யனார் துணை இன்று இல்லத்தரசிகளால் கொண்டாடப்படும் ஒன்று.
முன்னதாக இவர் நடித்த எதிர்நீச்சல் தொடரும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. டிஆர்பியில் வெற்றி அடைந்ததுடன் இவரது நடிப்புக்கு பாராட்டையும் அற்பணிப்புக்கான அங்கீகாரத்தையும் பெற்றுக்கொடுத்தது.
அய்யனார் துணை தொடரில் இவர் நடிக்கும் நிலா பாத்திரம் மக்களை ஈர்த்து வருகிறது. அதற்கான பாராட்டுகளைப் பெற்று டிரெண்டில் இருக்கிறார்.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலனை கரம் பிடிக்கப் போவதாக அவர் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
இவர் கடந்த 24ம் தேதி முதன்முறையாக தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து நேற்றைய தினம் இருவருக்கும் திருமணம் நடக்கவிருக்கும் தேதியை அறிவித்துள்ளனர்.
மதுமிதா - பாலாஜி திருமால் ஜோடியின் திருமணம் வரும் செப். 30 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுமிதா - பாலாஜி திருமால் ஜோடிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்