Super Singer Senior Season 11 coming soon
Super Singer Senior Season 11 coming soonSuper Singer Senior Season 11 coming soon

அதிரடி மாற்றங்களுடன் கலக்கலாக மீண்டும் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!

வெறும் பாடல் போட்டி அல்ல – இது மண்டல வாரியான போட்டியாளர்களின் மாபெரும் இசையுத்தம்!
Published on

இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!

மண்டல வாரியான போட்டியாளர்கள், வேற லெவல் சர்ப்ரைஸ், வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !!

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று, கடந்த 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வந்துவிட்டது. இந்த முறை அதிபயங்கர டிவிஸ்ட், வேற லெவல் சர்ப்ரைஸ், என பல புதுமைகளுடன் அசத்த வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர் 11.

தமிழக மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்து, அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம், பல பாடகர்கள் திரையுலகில் அறிமுகமாகி, பிரபல பாடகர்களாக திரைத்துறையில், கோலோச்சி வருகின்றனர். பல இளம் திறமையாளர்களின் வாழ்வின் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி, இந்த முறையும் பல அதிரடி புதுமைகளுடன் வருகிறது சூப்பர் சிங்கர் சீனியர்.

சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 நிகழ்ச்சியில், இந்த சீசனில் ரசிகர்களுக்கான பெரிய சர்ப்ரைஸ் ஒன்றும் இருக்கிறது. முதன்முறையாக யாருமே எதிர்பாராத ஒரு புதிய செலிபிரிட்டி நடுவர், இந்த பிரபலமான சூப்பர் சிங்கர் நடுவர்கள் குழுவில் இணைகிறார். மேலும் இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமைய இருக்கிறது.

இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் இந்த முறை பங்கேற்பாளர்கள் மண்டல அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொரு மண்டலத்தைச் சேர்ந்த பாடகர்களும், தங்கள் இசைத்திறமையை வெளிக்கொண்டு வரவும், பட்டத்தைக் கைப்பற்றவும் களமிறங்கவுள்ளனர்.

பல அதிரடி மாற்றங்கள், முற்றிலும் மாறிய வடிவம், புதிய ஜட்ஜ், வேற லெவல் சர்ப்ரைஸ்கள் என இந்த சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com