"இதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு முன் ஓய்வு பெற்றுவிடுவேன்" - டாக்ஸிக் படத்தை சாடினாரா டாப்சி?

திரைப்பட விமர்சகர் சுசின் மெஹ்ரோத்ராவுக்கு அளித்த பேட்டியில் சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படங்களை விமர்சிக்கும் வகையில் பேசியிருந்தார் டாப்சி.
"இதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு முன் ஓய்வு பெற்றுவிடுவேன்" - டாக்ஸிக் படத்தை சாடினாரா டாப்சி?
"இதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு முன் ஓய்வு பெற்றுவிடுவேன்" - டாக்ஸிக் படத்தை சாடினாரா டாப்சி?
Published on
Updated on
2 min read

பாலிவுட்டிலும் தென்னிந்தியாவிலும் தனித்துவமான படங்களில் நடித்து பெயர் பெற்றவர் நடிகை டாப்சி பன்னு. இவரது கருத்துகள் திரைத்துறையிலும் வெளியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது வழக்கம். சில நேரங்களில் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இவர் சமீபத்தில் சினிமா கேரியர் பற்றி தெரிவித்த கருத்துகள் தற்போது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

திரைப்பட விமர்சகர் சுசின் மெஹ்ரோத்ராவுக்கு அளித்த பேட்டியில், சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட படங்களை விமர்சிக்கும் வகையில் டாப்சி பேசியிருந்தார்.

அந்தக் கருத்துகள், யஷ் - கியாரா அத்வானி நடிப்பில் வெளியான 'டாக்ஸிக்' (Toxic) படத்தைத்தான் குறிவைக்கின்றன என நெட்டிசன்கள் இணையத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளனர்.

டாக்சிக்
டாக்சிக்

டாப்சி, "சமீபத்தில் வெளியான சில படங்களைப் பார்த்துவிட்டு எனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தேன். 'ஒருவேளை சினிமாவில் இருந்து ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துடுச்சோ' என்று கூட யோசித்தேன்!

"எனக்கு என் வேலை பிடிக்கும்; ஆனால், இந்த மாதிரி படங்களில் நடிக்கும் அளவிற்கு நான் கண்மூடித்தனமாக இல்லை. காலம் மாறினாலும், 10 ஆண்டுகள் கழித்துப் பார்க்கும்போது, எனது ஃபிலிமோகிராஃபி எனக்கு அசிங்கத்தைத் தராத வகையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சு, 'டாக்ஸிக்' படத்தில் கியாரா அத்வானியின் கதாபாத்திரத்தைத் தாக்கிப் பேசப்பட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பலரும் டாப்சி, கியாரா அத்வானியின் உயரத்தைப் பார்த்துப் பொறாமைப்படுவதாகக் கூறியுள்ளனர்.

மேலும், டாப்சி கவர்ச்சியான தோற்றத்தில் நடித்த 'ஹசீன் தில்ருபா' போன்ற படங்களைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், டாப்சி தான் 10 ஆண்டுகளுக்கு முன்னரே தனது திரைப்பயணத்தைத் தொடங்கியதால் நல்ல படங்களில் நடித்ததாகவும், இப்போது வருவது போல ஒரே மாதிரியான படங்கள் மட்டுமே வந்திருந்தால், நல்ல கேரியர் அமைந்திருக்காது என்றும் பேசியுள்ளார்.

கே.வி.என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் பான்-இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் வெளியான 'டாக்ஸிக்' திரைப்படம், வசூலில் சறுக்கியதோடு, பெண்களைச் சித்தரித்த விதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

கீது மோகன்தாஸ் இயக்கிய இந்த படத்தில் யஷ் உடன் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

"இதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு முன் ஓய்வு பெற்றுவிடுவேன்" - டாக்ஸிக் படத்தை சாடினாரா டாப்சி?
"எங்கள் வெற்றியை அனுபவிக்க முடியவில்லை.." - விராட், அனுஷ்கா குறித்து ஸ்ரீராம் நெனே சொன்னது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com