நடிகரான சித்தன் ரமேஷ், ஜீவா ஆகியோரின் தந்தையான ஆர்.பி. சௌத்ரி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கார் விபத்தில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 'சூப்பர் குட்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 1980-களின் பிற்பகுதியிலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் எண்ணற்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த ஒரு புகழ்பெற்ற ஒரு இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர். மேலும் இவர் தமிழில் மட்டும் 99 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், பல தயாரிப்பாளர்கள் தயாரிக்க தயங்கும் பல கதைகளை துணிச்சலுடன் படமாக கொடுத்துள்ளார். தற்போது இவரது இழப்பு என்பது தமிழ் சினிமாவில் ஈடுசெய்யமுடியாத ஒன்றாக உள்ளது.
இவர் தயாரித்து பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை மக்களிடையே பெற்றுள்ளன. குறிப்பாக, பூவே உனக்காக, சூர்யவம்சம், நீ வருவாய் என, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி, ஜில்லா, ரௌத்திரம், மொட்ட சிவா கெட்ட சிவா, மாரிசன் போன்ற படங்களை தயாரித்துள்ளார். மேலும், மக்களால் பெரிதும் அறியப்பட்ட கே.எஸ். ரவிக்குமார், விக்ரமன் மற்றும் சசி ஆகிய மூவரையும் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் விக்ரமனை 1990ல் வெளிவந்த 'புது வசந்தம்' மூலம் அறிமுகம் செய்தார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரை 1990ல் 'புரியாத புதிர்' திரைப்படம் மூலம் அறிமுகம் செய்தார். இயக்குநர் சசியை 1998ல் வெளியான 'சொல்லாமலே' திரைப்படத்தின் மூலம் மக்களுக்கும் திரைத்துறைக்கு அறிமுகம் செய்தார்.
சற்றும் எதிர்பாராமல் நிகழ்த்த இவரது இறப்பு திரைத்துறையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது உடல் நாளை சென்னைக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடத்த 2024 ஆண்டு ஆர்.பி. சௌத்ரி மகனான நடிகர் ஜீவா சின்னசேலத்தில் உள்ள அமியகாரம் கிராமம் அருகே பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கார் விபத்தில் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.