ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ம் தேதி வெளியாகி கோலிவுட் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து புதிய சாதனை படைத்துள்ளது. தற்பொது 25 நாட்களை கடந்தும் ஹவுஸ்புல்-ளாக ஓடி கொண்டிருக்கிறது. இயக்குனர் நெல்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் முதல் பாகம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணியில் அதன் இரண்டாம் பாகம் “ஜெயிலர் 2” உருவானது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ டிக்கெட் முன்பதிவில் மட்டுமே 70 கோடி ரூபாய் வசூலை குவிந்திருந்தது.
“ஜெயிலர் 2” முதல் நாளிலேயே உலக அளவில் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் 5 நாட்களில் ரூ.500 கோடி மற்றும் வெளியான முதல் வாரத்தில் ரூ.549 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த பெருமையைப் பெற்றுள்ளது. திரையரங்குகளில் தொடர்ந்து ஹவுஸ்புல்-ளாக ஓடுவதால் தீபாவளிக்குள் 1000 கோடியை தாண்டும் என்று கணிக்கப்பட்டது. ஜெயிலர் முதல் பாகத்தை விட அதிக வசூலைக் குவித்த உள்ள இந்தத் திரைப்படம்… தமிழில் அதிக வசூலை குவித்த முதல் படம் என்ற இண்டஸ்ட்ரி ஹிட் சாதனையையும் கைப்பற்றியது. இதற்கு முன் ரஜினியின் 2.o திரைப்படம் இந்த சாதனையை சுமார் 800 கோடி வசூல் என்ற சாதனையை பெற்றிருந்தது. தனது சாதனையை தானே முறியடித்து தமிழ் சினிமாவில் ‘தலைவரு நிரந்தரம்’ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் 25 நாட்களை கடந்து இன்று வரை ஹவுஸ்புல்-ளாக ஓடி கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 மற்றும் ராமாயண உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது. இத்தனை போட்டிகளுக்கு நடுவிலும் ஜெயிலர் 2 தனது வசூல் ப்லோவ்-வில் இருந்து சற்றும் தடுமாறவில்லை. அதன்படி ஜெயிலர் 2 நேற்று வரை உலகளவில் ரூ. 830+ கோடி வசூலை குவித்துள்ளது. மேலும் நவம்பர் 12 ஓடிடியில் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. அதில் ‘இயக்குநரின் கட்’ அல்லது ‘அன்கட்’ வெர்ஷன் வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.
தற்போது உள்ள போட்டியில் திரைப்படம் 25 நாட்களை கடப்பது என்பதே கடினமான ஒன்று. அதில் வசூலையும் குவித்து, இன்றுவரை ஹவுஸ்புல்-ளாக வைத்து கொள்ள தலைவரால் மட்டும்தான் முடியும் என்று படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இதை கொண்டாடும் விதமாக வீடியோ வெளியிட்டு “தலைவரு நிரந்தரம்” என பதிவிட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.