

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த சில மாதங்களாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது. R. J பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் மே 14, 2026 அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டங்களுக்கு தயாராக காத்திருந்தனர். ஆனால் நேற்று மாலை வரை படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், இயக்குநர் R. J பாலாஜி தனது சமூக வலைதள பதிவின் மூலம் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தார். “இன்று மாலைக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் சில காரணங்களால் தாமதமானது. அனைத்தையும் தாண்டி ‘கருப்பு’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இதையடுத்து இன்று வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து பார்க்க, படத்தின் கதாநாயகி திரிஷா ரோகினி திரையரங்கிற்கு வருகை தந்தார். அவருடன் இயக்குநர் R J பாலாஜி மற்றும் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் வந்திருந்தனர். திரைப்படம் முடிந்து வெளியே வந்த திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அதனைத் தவிர்த்த திரிஷா, தனது காரில் ஏறி புறப்படத் தயாரானார். அப்போது ரசிகர் ஒருவர், “தளபதிய கேட்டேன்னு சொல்லுங்க” என்று சிரித்தபடி கூறினார். அதற்கு சற்றும் தயங்காமல் திரிஷா, “கண்டிப்பாக” என பதிலளித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு தரப்பினரிடையே பேசுபொருளாகியுள்ளது. நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யை அவரின் ரசிகர்கள் ‘தளபதி” என அடைமொழியுடன் அழைப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பும் விஜய் மற்றும் திரிஷா இருவரும் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களிலும், சினிமா வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது திரிஷா அளித்துள்ள இந்த பதிலையும் நெட்டிசன்கள் பல்வேறு கோணங்களில் விமர்சித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.