

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் 2, அக்டோபர் 15ம் தேதி வெளியாகி கோலிவுட் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்து புதிய சாதனை படைத்திருந்தது. திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்தும் ஹவுஸ்புல்-ஆக ஓடிக் கொண்டிருந்த ‘ஜெயிலர் 2’ கடந்த 12ம் தேதி OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயிலர் 2 படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, வித்யா பாலன், யோகி பாபு, மிர்னா மேனன், ரித்விக், நமோ நாராயணா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயிலர் 2 செய்த மேஜிக்
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ டிக்கெட் முன்பதிவில் மட்டுமே 70 கோடி ரூபாய் வசூலை குவிந்திருந்தது. முதல் நாளில் உலக அளவில் ரூ.125 கோடிக்கும் மேலும், 5 நாட்களில் ரூ.500 கோடி மற்றும் வெளியான முதல் வாரத்தில் ரூ.549 கோடி என வசூலில் நிகழ்த்திய மேஜிக் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தும் ஓயவில்லை.
தீபாவளி வெளியான புது படங்களின் போட்டிகளுக்கு நடுவிலும் ஜெயிலர் 2 தனது வசூல் ப்லோவ்-வில் இருந்து சற்றும் தடுமாறது ஹவுஸ்புல் ஷோவை தொடர்ந்தது.
மேலும் 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் சினிமா பார்க்க வந்திருந்தார். இது ரஜினி ரசிகர்களுக்கு ஒரு ஆனந்த கண்ணீர் மொமெண்ட்-ஆக கூட இருந்திருக்கும். தமிழில் முதல் ₹100 கோடி வசூல் செய்த கொடுத்த ரஜினிகாந்த், முதல் ₹700 கோடி வசூல் செய்த படத்தையும் கொடுத்து, தற்போது 800 கோடியை தாண்டிய முதல் படைத்தையும் கொடுத்து தலைவர் நிரந்தரம் என்பதை நிரூபித்தார்.
தற்போது மேலும் ஒரு மேஜிக்-கை நிகழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார். மற்ற மொழி இண்டஸ்ட்ரிகளில், அதிக வசூல் கொடுத்த தமிழ் படம் எனும் வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது ஜெயிலர் 2. அதாவது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் மற்ற இந்திய மொழிகளில் அதிக வசூலை கொடுத்த தமிழ்ப்படம் எனும் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது ஜெயிலர் 2. ஏற்கனவே தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் உள்ள ஜெயிலர் 2 உலக அளவிலும், இந்திய மொழிகளிலும் முதல் இடத்தை பிடித்து சாதித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள, திரைத்துறை வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, அனைத்து இண்ட்ரஸ்களிலும் ஜெயிலர் 2 தான் டாப் என்று பட்டியலிட்டு, ONE MAN. TOTAL DOMINATION! என சூப்பர் ஸ்டாரை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் இந்தியத் திரைத்துறையின் பாக்ஸ் ஆபிஸ் ஆய்வாளரான ரமேஷ் பாலா ஒரு பேன் பாயகவே மாறி இந்த சாதனையை மகிழ்ச்சியுடன் பதிவிட்டு Fire விட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.