
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் தக் லைஃப். கமல் ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளன.
ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காட் ஃபாதர் பாணியா?
ரங்கராய சக்திவேல் (கமல்) என்ற பெரிய காங்ஸ்டர் -க்கும் அவர் மகன் அமர் (மகன்) -க்கும் இடையில் நடக்கும் கதையே இப்படமாக இருக்கும் என்பது டிரைலர் -ல் தெரிகிறது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு மணிரத்தினமும் கமல் ஹாசனும் கைகோர்த்துள்ளனர்.கடைசியாக இந்த காம்போவை நாயகன் படத்தில் பார்த்திருப்போம்.
டிரைலர் உண்மையில் மிரட்டலாகவே உள்ளது. சுமார் 2 நிமிடம் வெளியான இந்த டிரைலர் -இல் அனல் பறக்கும் வசனங்களும் எதிர்பாராத காட்சி அமைப்புகளும் நம்மை மிரள வைக்கின்றன. கதை ஒரு வேளை பழைய கதையாக இருந்தாலும் எல்லாரோருடைய favourite -களும் திரையில் தோன்றவிருப்பதால் நிச்சயம் ரசிகர்களால் விரும்பப்படும் என்றே சொல்லலாம்
ஆனால் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‘செக்க சிவந்த வானமும் ‘ ஏறத்தாழ இதே pattern தான். 1969 ஆம் ஆண்டுகளில் வெளியான காட் ஃபாதர் -பட பாணியை தனது படங்களில் பயன்படுத்தி வரும் மணிரத்னம், இப்படத்திலும் அதையேதான் முழுமையாக கையாண்டுள்ளாரா? என்பது ஜூன் 5 தான் தெரியும்..
மீண்டும் வருகிறார் Atman!
நடிகர் சிம்பு பல காலமாக தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரசிகர் பட்டாளம் அதே வேகத்துடன் ஒப்போதும் சிம்புவை ஆதரிக்கின்றனர் என்பது உண்மையில் வியக்கத்தக்க ஒரு விஷயம் தான்.
உண்மையில் சொல்லப்போனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்திற்கு பிறகு சிம்பு பெரும் வெற்றியை சுவைக்கவில்லை. மேலும் AAA படம் வருக்கு பெரும் சறுக்கலை தந்தாலும் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படம் மூலம் கம்பேக் கொடுக்க முயன்றார். ஆனால் அந்த நேரத்தில்தான் அவரது உடல் எடை குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் ‘ஈஸ்வரன்’ படத்திற்காக கடுமையாக உழைத்து வியத்தகு வகையில் உடல் எடையை குறைத்தார். அந்த சமயத்தில்தான் அவருக்கு ‘atman’ என்ற பெயர் வழங்கப்பட்டது. குடும்ப எமோஷனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஈஸ்வரன்’ படம் சிம்புவிற்கு நல்லதொரு காம்பேக்காக அமையவில்லை.
அதன்பின்னர் வந்த வாய்ப்புதான் ‘Thug Life’ மிகப்பெரிய பேனரில் வெளியாகவும் இப்படத்தில், கமல்ஹாசனுடன் திரையை பகிரும் வாய்ப்பை பெற்றுள்ள சிம்பு. தனது முழு உழைப்பையும் இந்த படத்திற்கு கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படத்தின் ட்ரைலர் -ல் சிம்பு பேசியுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.”இனிமே நான் தான்..ரங்கராய சக்திவேல்” என்ற வசனம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. செக்க சிவந்த வானம் படத்தில் மழையில் நனைந்தபடி சிம்பு பேசிய “வந்தா ராஜாவாதான் வருவேன்” என்ற வசனம் தற்போது உண்மையாக உள்ளதாக எஸ்.டி.ஆர் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
“ராஜாவாக வரும் சிம்பு வாகை சூடுவாரா..? என்பது ஜூன் -5 அன்றுதான் தெரியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்