
ரெட் ஜெயண்ட் மூவிஸ், மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் புரொடக்ஷன் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது “தக் லைஃப்”.
38 ஆண்டுக்குகளுக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி ‘Red Card’ கொடுக்கப்பட்ட விவகாரத்தில் நடிகர் சிம்பு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார் எனவே சிம்பு -ன் கம் பேக் படமாகவும் Thug Life இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இவர்களோடு ரகுமான் இசையில், திரிஷா, நாசர், ஜோஜு , ஐஸ்வர்யா, அபிராமி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது..
கன்னடத்தில் தடை
மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இப்படத்தின் மீதான ஹைப்பை மேலும் கூட்டிவிட்டது அதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ‘தக் லைஃப்” படத்தை பார்த்தபிறகு நீங்கள் நாயகனை மறந்து விடுவீர்கள், என்றெல்லாம் பேசியிருந்தார்.
அதோடு இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த கன்னட நடிகரான சிவராஜ் குமாரை வரவேற்று பேசிய கமல் ஹாசன் “தமிழிலிருந்து பிறந்தது தான் உங்கள் பாஷை” என பேசியது பெரும் சர்ச்சையி கிளப்பிய நிலையில் கர்நாடகாவில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
படம் எப்படி இருக்கு!
இத நிலையில்தான் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இப்பத்திற்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது, திரையரங்குகளில் இருந்து வெளிவந்த ரசிகர்கள் படம் மெதுவாக நகர்வதாக சொல்கின்றனர்.
கதையின் கரு என்ன?
மணிரத்னத்தின் கேங்ஸ்டர் படம் என்றாலே அது ஒரு பேட்டர்ன் தான். “God father” பேட்டர்ன். “பெரிய தாதாவாக வாழும் ரங்க ராய சக்திவேல், ஒரு Chasing -ல் தெரியாமல் சிறு வயது சிம்புவின் அப்பாவை கொன்றுவிடுகிறார். அதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில், சிம்புவை அழைத்து சென்று தன் சொந்த மகனை போல் வளர்க்கிறார்.காலப்போக்கில் சிம்புவே வளர்ப்பு தந்தைக்கு எதிராக மறுக்கிறார். இறுதியில் இந்த போட்டியில் யார் வென்றார்கள் என்பதுதான் கதையின் மூலம்.
இது அதே பழைய மாவுதான், ஆனால் அதை புது தோசையாக சுட்டு மக்களிடம் கொடுக்க மணி தவறிவிட்டார்.
படத்தில் என்ன குறை!
படத்தில் என்ன குறை என்ற கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு ரசிகர்கள் “படமே குறையாகத்தான் இருக்கிறது” என கிண்டலாக பதிலளித்துள்ளனர். அதுமட்டுமின்றி படம் மிக மிக மெதுவாக செல்வதாகவும், செக்க சிவந்த வானத்தின் அதே சாயல் Thug Life -லும் இருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். தேவியேயற்ற இடங்களில் வரும் வசனங்கள், கதாபாத்திரங்களின் இயல்பற்ற தன்மை படத்தி சற்று ரசிகர்களிடம் இருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது.
சிம்புதான் படத்தை காப்பாற்றினாரா?
படத்தில் சிம்புவின் நடிப்பும், கமலின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக படத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகள் படத்தை ஓரளவு நகர்த்தி சென்றிருக்கின்றன. இவர்கள் இருவரின் Screen presence மட்டுமே படத்திற்கு வலு சேர்த்திருப்பதாக ரசிகர்கள் ரிவியூ கொடுத்து வருகின்றனர். இசை புயலின் இசையும் ரவி.கே.சந்திரன் அவர்களின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஓரளவு ரசிக்கும்படி செய்துள்ளது. “மற்றபடி மணி நம் எல்லாரையும் ஏமாற்றிவிட்டார்” என்பதே உண்மை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்