கொரியன் மொழியில் ரீமேக் ஆகிறதா த்ரிஷ்யம்...!!

கொரியன் மொழியில் ரீமேக் ஆகிறதா த்ரிஷ்யம்...!!

த்ரிஷ்யம் திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது.

2013-ம் ஆண்டு மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.  அதையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்தது.  இந்த படம் வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதோடு சிங்கள மொழி, மற்றும் சீனாவில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் என்ற பெருமையும் பெற்றது.

இந்நிலையில், ‘த்ரிஷ்யம்‘ திரைப்படம் கொரியன் மொழியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் இந்த அறிவிப்பு சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com