"ஸ்டார் பந்தா இல்லாமல்.. முன்பதிவில்லா ரயிலில் வந்த நடிகர்" - மக்களோடு மக்களாக ஒரு சர்ப்ரைஸ் பயணம்! புது படத்துக்கு புரொமோஷனா?

'அப்பா குட்டி' திரைப்படத்தினை ப்ரொமோட் செய்யும் வகையில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
Appa Kutty movie promotion
Appa Kutty movie promotion
Published on: 
Updated on: 
1 min read

நேற்று திரையரங்குகளில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'அப்பா குட்டி' திரைப்படத்தினை ப்ரொமோட் செய்யும் பொருட்டு முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியில் ஏறி பயணம் மேற்கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நவம்பர் 20-ம் தேதி திரையங்குகளில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி நடித்த 'அப்பா குட்டி' திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமானது மு. மாறன் என்பவரால் இயக்கப்பட்டு திரையங்குகளில் நேற்று வெளியானது. அப்பா மகள் பசப்பிணைப்பில் உருவான இந்த திரைப்படம் திரையரங்குகளில் கலவையான விமர்சனத்தினை பெற்று நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

ஏற்கனவே விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வெளியான, நான், சலீம், பிச்சைக்காரன், நூறு சாமி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. மேலும், இவர் நடித்து வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, இவர் இசையமைத்த பாடல்கள் கூட ரசிகர்கள் மத்தியில் 'ஹிட்' தான். அந்தவகையில், மெலோடியாக இருக்கட்டும், குத்து பாடல்களாக இருக்கட்டும் எல்லாவற்றிலும் தனக்கென ஒரு பாணியை வைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவைத்துள்ளார். மேலும், இவரது 'நேர்காணல்கள்' கூட ஒரு 'தெரபி' போல இருப்பதாக பார்வையாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

அவரது நேர்காணலில், மனிதம் குறித்தும் அடுத்தவர் மனநிலையை புரிந்து கொள்ளுதல், அவர்களுக்காக அவர் கொண்ட பரிவு, நகைச்சுவை என்று 'ச்சே.. என்ன மனுஷன்யா..' என்று கூறும் அளவிற்கு அவரது நேர்காணல்கள் இருப்பதோடு பலருக்கும் அது பிடித்தமான ஒன்றாக இருந்துவருகிறது. இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் வெளியான 'அப்பா குட்டி' திரைப்படத்தினை ப்ரொமோட் செய்யும் வகையில் இன்று காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்துள்ளார். எளிமையான உடையில் மக்களோடு மக்களாக அவர் பயணம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளபக்கத்தில் வைரலாகி வருகிறது.

மேலும், கோயம்புத்தூர் சென்ற பிறகு திரையரங்கிற்கு சென்று 'அப்பா குட்டி' திரைப்படத்தினை காணும் ரசிகர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் ஆண்டனியின் ரசிகர்கள், திரைப்பட ரசிகர்கள் ஆகியோர் விஜய் ஆண்டனியோடு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே 'அப்பா குட்டி' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஷோ-வில் விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா விஜய் ஆண்டனி, தனது கணவர் செருப்பு அணியாமல் இருப்பது குறித்தும், தனது மகள் இறக்கும்போது அவரது கையில் இருந்த கைக்கடிகாரத்தைத்தான் அவர் கட்டுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.