நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் இணைந்து கலந்துகொண்ட ‘காஃபி வித் கரண்’ என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் புதிய எபிசோடு சமீபத்தில் வெளியானது. தற்போது அதன் கட் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அந்த இன்டர்வியூவில் விஜய் மற்றும் ரஷ்மிகாவின் காதல் குறித்து சுவாரஸ்யமான பல்வேறு விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர். இந்த உரையாடலின் சில வீடியோக்கள் மற்றும் புரோமோ காட்சிகள் தற்போது ட்ரோல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்முதலில் 2018-ம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்கள். தொடர்ந்து 2019-ம் ஆண்டு வெளியான ‘டியர் காம்ரேட்’ படத்திலும் இருவரும் நடித்திருந்தனர்.. இந்த கெமிஸ்ட்ரி திரையில் நல்ல ஜோடியாக வலம் வந்தனர்.
திரையில் இவர்களது ஜோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இருவரும் காதலிப்பதாகப் பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும் வெளிப்படையாக எதையும் பகிராமல் இருந்து வந்தனர். அதன்பின்னர் 2026 பிப்ரவரி 26-ம் தேதி உதய்பூரில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும், பல்வேறு "Couple Interview” கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண்” நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அதில் கரண் ஜோஹர்.. விஜய் தேவரகொண்டா எப்போது ராஷ்மிகாவைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்? என்ற கேள்வியை எழுப்பினார். அதற்கு விஜய் மற்றும் ரஷ்மிகாவின் பதில் தான் இங்கு ட்ரோல் மெட்டிரியலாக மாறியுள்ளது.
ஒருமுறை ஹாலிடே ட்ரிப் முடித்துவிட்டு விமான நிலையம் வந்தபோது, விஜய்யிடம், “நாம் திருமணம் செய்துகொள்வோம்” என ரஷ்மிகா கேட்டதாகவும், அதற்கு விஜய், “இதையே நீ 100 முறை கேள்” என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, சுமார் ஓராண்டு காலமாக விஜய்யிடம் திருமணம் குறித்து ராஷ்மிகா கேட்டு வந்தாகவும் தெரிவித்தனர். இந்த கிளிப் தான் தற்போது இணையத்தில் ட்ரோல் மற்றும் விவாதத்தை ஏற்படுத்த முக்கியக் காரணமாக மாறியுள்ளது. ராஷ்மிகா ஏன் இத்தனை முறை திருமணம் குறித்து கேட்க வேண்டும் என்றும் ஒரு ஆண் தனது காதலியை இப்படி தான் கெஞ்ச வைப்பாரா? போன்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.
நிகழ்ச்சியின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவின் பேச்சு மற்றும் அவரது அணுகுமுறை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளன. சிலர் அவரை விஜய் ஆணவமாக நடந்து கொள்வதாகவும், ராஷ்மிகா தனது சுயமரியாதை மறந்து பேசுவதாகவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
ஒருவர் “விஜய் ஒரு ‘Red Flag’” என்றும், விஜய்யைத் திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக ராஷ்மிகா தனியாகவே இருந்திருக்கலாம்” என்றும் கமெண்டில் வறுத்தெடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள். அதேபோல், இந்த ஜோடியின் உரையாடல் குறித்துப் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.
விஜய் ஒரு என அவர்கள் குறிப்பிடுவதற்கு காரணம், தொகுப்பாளர் கரண் விஜயிடம் “Why Rashmika” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய் “ராஷ்மிகா தன்னுடன் இருக்கும்போது என் நாள் சிறப்பாக இருக்கிறது, உணவைப் பகிர்ந்துகொள்வது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது மற்றும் நான் இப்போது தான் நன்றாக உறங்குகிறேன்” என்றும் பதில் அளித்திருந்தார். மேலும் இதையெல்லாம் உணர்த்த அந்த தருணத்தில் தான் ரஷ்மிகாவை திருமணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இதில் ஒரு பெண்ணை தான் ஏன் தேர்வு செய்தேன் என்பதற்கு, நமது அன்றாட வாழ்வில் அனைவரும் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளை சொல்வது, சரியாக பொருந்தவில்லை என பல பெண்கள் விமர்சித்தது கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது விஜய் ஒரு இளவரசன் போல வாழ விரும்புவதாகவும் அதற்காக ராஷ்மிகா பணியாள் போல் நடத்தப்படுவதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளது. மேலும் ராஷ்மிகா தான் விஜயை காதலிக்கிறார்.. ஆனால் விஜய் அவரை மட்டுமே கருத்தில் கொண்டு சுயநலவாதியாக இருப்பதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளது. ராஷ்மிகா தனது சுயமரியாதை இழந்து இருப்பதாகவும் பலரும் இருவரையும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.