இனி 'எங்கள் தல' என்று கொண்டாடிய விஜய் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் ஒரேநாளில் "முற்றுப்புள்ளி" வைத்த ஷாலினி அஜித்! - என்ன இப்படி ஆச்சு!?

சில்வர்ஸ்டோனில் இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ஆம், அதிர்ச்சியடைந்தது அஜித் ரசிகர்கள்; ஆனந்தக் கண்ணீர் வடித்தது விஜய் ரசிகர்கள்.
Rajinikanth - Shalini Ajithkumar
இனி 'எங்கள் தல' என்று கொண்டாடிய விஜய் ரசிகர்கள்.. எல்லாத்துக்கும் ஒரேநாளில் "முற்றுப்புள்ளி" வைத்த ஷாலினி அஜித்! - என்ன இப்படி ஆச்சு!?
Published on: 
Updated on: 
2 min read

தமிழ்நாட்டில் நீண்ட காலமாக ‘கன்சிஸ்டன்ட்’ ஆகத் தொடர்ந்து நடந்து வரும் ஒரே விஷயம் ரசிகர் சண்டைகள்தான். ஒரு ஜோடி நடிகர்கள் தொழிலில் போட்டிபோடத் தொடங்கிவிட்டால் போதும், ரசிகர்கள் இரண்டு துருவங்களாகப் பிரிந்து, ஒருவரது ரசிகர்கள் மற்றொரு நடிகரையும், அவரது ரசிகர்கள் இவரையும் பழித்துப் பேசத் தொடங்கிவிடுவார்கள்.

அந்த நட்சத்திரங்களின் காலம் முடியும் வரை இந்தச் சண்டை இப்படியே தொடரும். பள்ளிப் பருவத்தில் ஒரு நடிகருக்காகச் சண்டையிடத் தொடங்கும் ரசிகர், சுடுகாடு வரை அவருக்குப் போட்டியான நடிகரைப் பழித்துப் பேசியே காலத்தைத் தள்ளிவிடுவார்.

டிஜிட்டல் யுகத்தில், இந்தச் சண்டைகள் பல கமெண்ட் பாக்ஸில் தொடங்கி இன்பாக்ஸில் முடிந்துவிடுகின்றன. அதற்குள் பல ட்விஸ்ட்டுகள் அண்ட் டர்ன்ஸும் (திருப்பங்களும்) நடக்கின்றன.

அப்படியாக நேற்றுவரை அஜித்தை கொண்டாடி வந்த விஜய் ரசிகர்கள் இன்று ஒரு புதிய சிக்கலில் மாட்டியுள்ளனர்.

விஜய் - அஜித் இருவரும் தங்கள் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் பரம போட்டியாளர்களாக இருந்தனர். இவர் படத்தில் அவருக்கு அட்வைஸ் பண்ண, அவர் பாடலில் இவருக்கு பதிலடி கொடுக்க என பன்ச் டயலாக்கில் கிரிஞ்ச் வசனம் பேசி சண்டையிட்டுக்கொண்டனர்.

Rajinikanth - Shalini Ajithkumar
Rajinikanth - Shalini Ajithkumar

இயல்பாக ரசிகர்களும் சண்டையிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் அஜித் ரசிகர் மன்றத்தை களைத்து ஒரு இடைவெளியை உருவாக்கினார். ஆனாலும் ரசிகர்கள் இடையிலான சண்டைகள் ஓயவில்லை.

இறுதியாக விஜய் சினிமாவை விட்டு வெளியேறி அரசியல் கட்சி தொடங்கிய பிறகும் கூட அஜித் ரசிகர்கள் விஜய்க்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

ஆனால், முதலமைச்சரான பிறகு அஜித் தனது கார் பந்தயத்தின் தொடக்க விழாவுக்கு விஜய்யை அழைக்க, சில்வர்ஸ்டோனில் இருவரும் கட்டியணைத்துக்கொண்டனர். இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். ஆம், அதிர்ச்சியடைந்தது அஜித் ரசிகர்கள்; ஆனந்தக் கண்ணீர் வடித்தது விஜய் ரசிகர்கள்.

விஜய்யின் அரசியல் வெற்றிக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவும் தேவை என்பதால், சினிமாவில் அஜித்துக்கு ஆதரவு கொடுத்தனர். ரசிகர் சண்டை என்பது ஒருமுறை தொடங்கிவிட்டால் முடியவே முடியாத ஒருவழிப் பாதையாகவே இருந்தது. இதுபோன்ற திருப்பங்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கக்கூடியவை!

சினிமாவில் அஜித்துக்கும், அரசியலில் (திமுக ஆதரவு எனச் சொல்லப்படுவதால்) விஜய்க்கும் என இருவரின் ரசிகர்களுக்கும் பொதுவான எதிரியாக ரஜினிகாந்த் இருந்தார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா மறைவுக்கு அஜித் இரங்கல் தெரிவிக்காதது சர்ச்சையானபோதுகூட, விஜய் ரசிகர்கள் அஜித்துக்கு ஆதரவாகப் பேசி வந்தனர்.

அப்போது, ‘ஜெயிலர் 2’ வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், முதலில் தேவாவின் குடும்பத்தினரைச் சந்தித்ததுடன், இரங்கல் வீடியோவையும் வெளியிட்டார்.

இதையடுத்து, இரு தரப்பு ரசிகர்களும் எக்ஸ் தளத்தில் சண்டையிட்டுக்கொள்ள, விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களுக்கு ஆதரவாகப் பேசி வந்தனர்.

Rajinikanth - Shalini Ajithkumar
Rajinikanth - Shalini Ajithkumar

இந்நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் ரஜினிகாந்த் இருவரும் அனிருத் வீட்டில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

அனிருத் – காவ்யா மாறன் திருமணம் குறித்த பேச்சுகளுக்கு மத்தியில், இந்த விழாவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் சிவகார்த்திகேயன், நெல்சன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர்.

ரஜினியும் ஷாலினியும் சம்பிரதாயமாக அல்லாமல், கைகளைக் கோத்துப் பேசிக்கொண்டிருப்பதைப் புகைப்படங்கள் காட்டுகின்றன.

ஷாலினி, ரஜினிகாந்தின் ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்களால் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஏற்கெனவே, ரஜினிகாந்த் திமுக ஆதரவாளர் என விமர்சித்து வந்தவர்கள், அவரது உறவினரான அனிருத், திமுக குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறப்படுவதையும் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், ஷாலினி அஜித் குமார் அங்கு நெருக்கமாகப் பழகுவதால், விஜய் ரசிகர்கள் தங்களது புதிய நண்பர்கள் மீதும் சந்தேகப் பார்வையைத் திருப்பியுள்ளனர்.

Rajinikanth - Shalini Ajithkumar
அண்ணாமலை vs பாஜக: எதற்கெடுத்தாலும் ‘தேச விரோதி’யா? ‘நறுக்’கெனக் கேட்ட 5 கேள்விகள்… BJP பதில் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com