"விஜய் தான் நம்பர்.1.. ரஜினி இல்ல".. செர்டிஃபிக்கேட் கொடுத்த ஓவர்சீஸ் விநியோகஸ்தர் "தீபா ஐயரும்.. அவரது கணவரும் ஃபிராடுகள்! - நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் விநியோகஸ்தர்கள் மற்றும் சர்வதேசத் திரைப்பட முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Deepa Iyer
Published on: 
Updated on: 
1 min read

தீபா ஐயர் என்பவர் சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்களை விநியோகம் செய்யும் ஒரு தொழில்முனைவோர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர் ஆவார். குறிப்பாக UK மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தமிழ் திரைப்படங்களை வெளியிடும் விநியோகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அஹிம்சா என்டர்டெயின்மென்ட் பிரபல வெளிநாட்டு விநியோக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றினார். இந்த நிறுவனம் தான் லியோ போன்ற பெரிய படங்களை வெளிநாடுகளில் விநியோகம் செய்தது. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 படத்தையும் விநியோகம் செய்யவுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான “லியோ” திரைப்படம் வெளிநாட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது படத்தின் விநியோகஸ்தர் தீபா ஐயர், "வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸில் விஜய்தான் நம்பர் 1 ராஜா" என்று அவர் கூறிய கருத்து விஜய் ரசிகர்களிடையே பெரும் வைரலானது. 

தற்போது அவர் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது மீண்டும் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. செப்டம்பர் 2026-ல், தீபா ஐயர் மற்றும் அவரது கணவர் சுதர்சன் நடேசன் ஆகியோர் மீது அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ₹10 கோடிக்கும் மேல் நிதி மோசடி செய்ததாக பொதுவெளியில் குற்றம் சாட்டியது. மேலும், அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தீபா ஐயர் முற்றிலுமாக மறுத்து, தங்களுக்கு எதிராக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி எக்ஸ் தளத்தில் விளக்கமளித்தார்.

அகிம்சா எண்டர்டெய்ன்மெண்ட் தனது அதிகாரபூர்வ எக்ஸ் தள பதிவு ஒன்று, தமிழ் விநியோகஸ்தர்கள் மற்றும் சர்வதேசத் திரைப்பட முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில் தீபா ஐயர் மற்றும் அவரது கணவர் சுதர்சன் நடேசன் ஆகிய இருவரையும் "ஏமாற்றுக்காரர்கள்" (Frauds) என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனத்தின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், சில ஆண்டுகளுக்கு முன்பே பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். திரைத்துறையினர் யாரும் இவர்களுடன் வணிகத் தொடர்பு வைக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளனர்.

மேலும் அவர்கள் ஏற்படுத்திய நிதி இழப்பு மிகக் கடுமையானது என்றும் நாங்கள் இன்றும் அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு அகிம்சாவுடன் எந்தத் தொடர்பும் இல்லை, இனிமேலும் இருக்காது. நாங்கள் மட்டும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. எனவே நாங்கள் இதைத் தெளிவாகக் கூறுகிறோம்: தீபா அல்லது சுதர்சனுடன் பணியாற்றாதீர்கள். அவர்களுடன் ஒப்பந்தம் செய்யதீர்கள்.. அவர்களுடன் முதலீடு செய்யாதீர்கள்.. எந்தச் சூழ்நிலையிலும் அவர்களுக்குப் பணத்தை கொடுக்காதீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்கள்.

'ஹம்சினி எண்டர்டெய்ன்மெண்ட்' என்ற நிறுவனமும் இவர்கள் மீது மோசடி புகார்களை முன்வைத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com