சவுக்கு சங்கரை மீண்டும் சிறைக்கு அனுப்பும் "சம்பவம்".. யார் இந்த "மஹாலட்சுமி"? - அத்தனை எதிர்ப்புகளையும் மீறி வென்றது எப்படி?

"எல்லா ஆதாரமும் உள்ளது.. அவர் எந்தெந்த போலீசிடம் பேசுகிறார், யாரையெல்லாம் இன்புளுயன்ஸ் செய்கிறார் என்பதெல்லாம் எனக்கு தெரியும்” என்றும் குறிப்பிட்டார்.
savukku shankar
Published on: 
Updated on: 
1 min read

கடந்த 2013-ஆம் ஆண்டு மகாலட்சுமி என்ற செய்தி வாசிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தமிழக அரசியல் மற்றும் சினிமா குறித்து பல்வேறு விமர்சனங்களை தனது யூடுப் பக்கத்தில் பகிர்ந்து வருபவர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மீது ஏற்கனவே நிலுவையில் பல வழக்குகள் உள்ளது. 

கடந்த 2013-ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் முன்னாள் செய்தி வாசிப்பாளரான மகாலட்சுமி என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் சவுக்கு சங்கர் தனது 'சவுக்கு டாட் நெட்' என்ற இணையதளத்தில் தன்னைப்பற்றி அவதூறான கருத்துகளையும் போலி ஆவணங்களையும் வெளியிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் சவுக்கு சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை அச்சுறுத்தி பணம் கோரியதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார். சவுக்கு இணையத்தில் மகாலட்சுமி குறித்து அவதூறாகவும், அவரது கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் எழுதியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 

இந்நிலையில் நேற்று சென்னை எழும்பூர் கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில், வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களை ஆய்வு செய்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவரை குற்றவாளி என அறிவித்தார். செய்தி வாசிப்பாளரும் வழக்கறிஞருமான மகாலட்சுமி தொடர்ந்த அவதூறு மற்றும் மிரட்டல் வழக்கில், யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013-ல் தொடரப்பட்ட இந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்புக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மனுதாரர் மஹாலட்சுமி, “ என்னிடத்தில் உண்மையுள்ளது, எல்லா ஆதாரமும் உள்ளது. அவர் எந்தெந்த போலீசிடம் பேசுகிறார், யாரையெல்லாம் இன்புளுயன்ஸ் செய்கிறார் என்பதெல்லாம்  எனக்கு தெரியும்” என்றும் குறிப்பிட்டார். மேலும், “சவுக்கு சங்கர் என்மீது பொய் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதிலும் உண்மையோடு அணுகி, நிரூபிப்பேன்” என்றும் தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com