வரலாறு படைக்கும் விஜய் சேதுபதி.. ஹாலிவுட் நிகழ்ச்சியில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர்! எம்மி அப்டேட்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது. அவரும் பல்வேறு இடங்களில் ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Vijay Sethupathi Creates History: First Indian Actor to Present an Award at International Emmys
வரலாறு படைக்கும் விஜய் சேதுபதி.. ஹாலிவுட் நிகழ்ச்சியில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர்! எம்மி அப்டேட்
Published on: 
Updated on: 
1 min read

நடிகர் விஜய் சேதுபதி, இந்த ஆண்டு காந்தி டாக்ஸ் படத்தின் தோல்விக்குப் பிறகு 'பத்தா' படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் விஜய் சேதுபதி.

இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் விமர்சனரீதியாகவும் மிகவும் பாராட்டப்பட்டது. இதுதவிர ஜெயிலர் படத்திலும் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து அவர் நடித்துள்ள ரயில், பிசாசு 2, ஸ்லம்டாக் - 33 டெம்பிள் ரோடு படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் இஞ்சி வெல்லம் படங்களிலும் நடித்து வருகிறார்.

விருது வழங்கும் விஜய் சேதுபதி

இப்படியான மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் லைனப் வைத்திருக்கும் விஜய் சேதுபதி, வருகின்ற நவம்பர் 23 அன்று நியூயார்க்கில் நடைபெறவுள்ள 54வது சர்வதேச எம்மி விருது வழங்கும் விழாவில் விருது வழங்குபவராக கலந்துகொள்ள இருக்கிறார்.

ஆஸ்கருக்கு இணையான இந்த விழாவில் விருதை வழங்கப் போகும் முதல் இந்திய நடிகராக விஜய் சேதுபதி இருப்பார். 2016 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 68வது பிரைம்டைம் எம்மி விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ரா டாம் ஹிடில்ஸ்டனுடன் இணைந்து ஒரு விருதை வழங்கியது கூறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றது. ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டும் வருகிறது.

விஜய் சேதுபதியும் பல்வேறு இடங்களில் ஹாலிவுட் படங்களில் நடிப்பதற்கு இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதனால் எம்மி மேடை அவருக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இந்திய படைப்புகளுக்கு அங்கீகாரம்

இந்த ஆண்டு நடைபெறும் சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு படைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சோனி லைவ் தளத்தில் வெளியான 'Real Kashmir Football Club' தொடர் சிறந்த நாடகத் தொடருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வீர்தாஸின் 'Vir Das: Fool Volume' நிகழ்ச்சி சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Vijay Sethupathi Creates History: First Indian Actor to Present an Award at International Emmys
"அவர்தான் சூப்பர் ஸ்டார்.. " ஜெயிலர் 2 -வின் மேஜிக்கல் வெற்றி.. 75 வயதிலும் தொடரும் வசூல் வேட்டை! வியக்கும் ஜென் ஆல்பா!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்