கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஜெர்மன் இன்ஃப்ளூயன்சரான லிசலாஸின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு லைக் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, வெள்ளிக்கிழமை அன்று (17ம் தேதி) அவர் இந்தியாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். விரைவிலேயே, லிசலாஸின் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இதை தொடர்ந்து சர்ச்சையும் கிளம்பிய நிலையில் தற்போது, அந்த ஜெர்மன் இன்ஃப்ளூயன்சர் இது குறித்து மௌனம் கலைந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் ஜெர்மன் இன்ஃப்ளூயன்சரான லிசலாஸின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு 'லைக்' செய்து, பின்னர் 'அன்லைக்' செய்த விஷயம் இணையவாசிகளிடம் ஒரு பெரும் விவாதத்தையே கிளப்பியது. "நான் எழுந்ததும் செய்திகளில் என் பெயர் அடிபட்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது," அவர் எப்போது அந்தப் புகைப்படத்தை லைக் செய்தார் என்று கூட எனக்குத் தெரியாது, செய்திகள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். பலரும் பல்வேறு தளங்களில் என்னைப் பற்றி வந்த கட்டுரைகளைக் கண்டுபிடித்து, அவற்றை எனது DM-மிற்கு அனுப்பினார்கள்" என்று லிஸ்லாஸ் கூறினார். மேலும், “அவர் அதை லைக் செய்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் அவர் அதை 'லைக்' செய்யாததால், நான் அவருக்காகச் சற்று வருத்தப்பட்டேன். ஏனென்றால், அது எப்படி இவ்வளவு பெரிய செய்தியானது என்று கூட எனக்குத் தெரியவில்லை. மக்கள் எப்படி இதைக் கவனித்தார்கள்?, எப்படி இதைச் செய்தியாக்கினார்கள்? ஒருவேளை அதன் பின்னணியில் அது அவருடைய நோக்கமாக இருந்திருக்காது. ஆனாலும், அதற்காக நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் அவரிடமிருந்து கிடைத்த ஆதரவையும் பாராட்டுகிறேன்" என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் லிஸ்லாஸ் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு லிஸ்லாஸ் தனது ஆதரவைத் தெரிவித்த பழைய வீடியோ ஒன்றும் இணையத்தில் வலம் வரத்தொடங்கியது.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது பெங்களூருவில் உள்ள தனது நெருங்கிய நண்பர்களுடன் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த அணியுடனான தனது தொடர்பு தொடங்கியதாக அவர் கூறினார்.“கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, நான் எனது பெங்களூரு நண்பர்களுடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். அது தொற்றிக்கொண்டது. நானும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ரசிகையாக மாறிக்கொண்டிருந்தேன். மேலும், நீங்கள் ஆர்சிபி அணியை ஆதரிப்பவராக இருந்தால், விராட் கோலிதான் பார்ப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமான வீரர். அவர் அவ்வளவு சிறப்பாக விளையாடுவார்" என்று அவர் கூறினார். விராட்டின் மீது இதுபோன்ற சர்ச்சைகள் வருவது இது முதல் முறையல்ல. மாறாக, 2025ல் நடிகையும் இன்ஃப்ளூயன்சருமான அவ்னீத் கவுரின் புகைப்படம் ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு 'லைக்' செய்ததாகக் கூறப்பட்டபோது, இணையத்தில் அது பரவலான விவாதத்தைத் தூண்டியது. அதன் பிறகு விராட் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருந்தார். மேலும் அதே போன்று இதுவும் அல்காரிதம் காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என்று சில நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் பலரும் விராட்டின் இந்த 'லைக்' விவாகரத்தில் அவரை கிண்டல் செய்த வண்ணமே உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்