'முத்தக்குமரன்' மீதான பாலியல் புகார்.. வாகிதா கொடுத்த Wedding vs Jail ஆப்ஷன்! - 'தீபாவளி ஸ்பெஷல்' வீடியோவால் மீண்டும் உக்கிரமான போர்!

"ஜெயிலுக்கு போக ரெடியா இருக்கியா? இல்ல என்கிட்டே வந்து சரணடைஞ்சிறீயா?" என்று பேசி அந்த வீடியோவை முடித்துள்ளார்.
Wahida Begum latest video
Wahida Begum latest video
Published on: 
Updated on: 
3 min read

மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் வாகிதா மற்றும் முத்துக்குமரன் விவகாரம். ஒன்று போலீசில் சரணடைந்துவிடு அல்லது என்னை திருமணம் செய்துகொள் என்று வீடியோ வெளியிட்டுள்ளார் வாகிதா பேகம். காரைக்குடி வரை சென்று காவல்துறையினரிடம் புகாரளித்ததன் பின்னணி என்ன?

முத்துக்குமரன் - வாகிதா பேகம் விவகாரம்:

சமூக வலைத்தளத்தில் பரவலாக அறியப்பட்ட பெண்தான் வாகிதா பேகம். இவர் பர்தா அணிந்து சினிமா பாடல்களுக்கு ஆடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தது சர்ச்சையாக பேசப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் வாகிதா பேகம் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அந்த வீடியோவானது பலரது கவனத்தையும் ஈர்த்து அதன்மூலம் பரவலாக வாகிதா பேகம் அறியப்பட்டார். மேலும், அந்த வீடியோ மூலம் மக்களின் ஆதரவினையும் எதிப்பினையும் சம்பாதித்தார். மேலும், இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவரது கணவரை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

Text
Text

இந்நிலையில் பேச்சாளரும், பிக்பாஸ் வெற்றியாளருமான முத்துக்குமரன் தன்னோடு உறவில் இருந்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டார். மேலும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பதாக கூறி தற்கொலை செய்துகொள்ள முயற்சியும் செய்துள்ளார். அவர் தற்கொலைக்கு முயற்சி செய்வதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. பின்னர், வாகிதா பேகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போன்று புகைப்படம் ஒன்றினை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் பூதாகரமானதற்கு பின்னர், முத்துக்குமரன் இதுகுறித்து எந்த விளக்க வீடியோவும் வெளியிடவில்லை. பின்னர் வாகிதா பேகம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரையும் அளித்தார். தனது புகாரில், ''நானும், வஹிதா பேகமும் நண்பர்களாக மட்டுமே இருந்தோம். எங்களுக்குள் காதல் உறவு ஏதுமில்லை. இயல்பாக, நகைச்சுவையான பேசிய சில வீடியோக்களை அவர் பதிவு செய்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அக்டோபர் 8 ம் தேதி வாகிதா பேகத்துடன் தொலைபேசியில் பேசியபோது என் மீது ஏற்பட்ட அதிருப்தியில் அவர் இப்படியான வீடியோக்களை பதிவிட்டுள்ளார். நான் ஒருபோதும் அவரை காதலிக்கவில்லை. காதலராக இருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Muthukumar Wahida Begum controversy
Muthukumar Wahida Begum controversy

அதன்பின்னர், தீபாவளி அன்று முத்துக்குமரன், "சைவ உணவு" சாப்பிடுவது போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டார். அதில் அவர், எல்லா துன்பங்களும் விலகி மனநிம்மதியும் மகிழ்ச்சியும் வரவேண்டி முருகனுக்கு விரதம் இருப்பதாக குறிப்பிட்டு 'இட்லியும் சாம்பாரும்' உண்பது போன்று ஒரு வீடியோவினை வெளியிட்டார். அதன் பின்னர்தான் இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

முத்துக்குமரனின் தீபாவளி சைவ உணவு வீடியோ வெளியான பின்னர், வாகிதா பேகம் "அது எப்புடி உன்னால சாப்பிட முடியுது?" என்று கூறி முத்துக்குமரன் தன்னோடு தனிமையில் இருந்துவிட்டு மறுநாளே தாலி வாங்கிவந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றியதாக வீடியோவில் அவர் தெரிவித்தார்.

Muthukumar Wahida Begum controversy
Muthukumar Wahida Begum controversy

முத்துகுமாரனின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை:

இதனையடுத்து, வாகிதா பேகம் மற்றுமொரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், காவல்நிலையத்தில் முத்துக்குமரனே ஒப்புக்கொண்டதாகவும், விளையாட்டாக கூறியதாகவும் வாகிதா பேகம் முத்துக்குமரனின் மீது குற்றச்சாட்டினை வைத்தார். மேலும், "உனக்கு எல்லாமே விளையாட்டா இருக்கலாம், அந்த விளையாட்டில் என் உயிர் போயிருந்தா?" என்று முத்துக்குமரனை நோக்கி கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், பலமுறை முத்துக்குமரனும் திருமணம் செய்துகொள்வதாக கூறியதாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் அந்த வீடியோவில், "ஜெயிலுக்கு போக ரெடியா இருக்கியா? இல்ல என்கிட்டே வந்து சரணடைஞ்சிறீயா?" என்று பேசி அந்த வீடியோவை முடித்துள்ளார்.

அதன் பின்னர், காரைக்குடி கள்ளல் காவல்நிலையத்தில் இருந்து வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில் அவர், தற்போது தான் காரைக்குடி கள்ளல் காவல்நிலையத்தில் இருப்பதாகவும் புகார் அளிப்பதற்கு முன்பு, முத்துக்குமரனின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார். அதன் பின்னர், இந்த விவகாரம் குறித்து மீண்டும் ஒரு வீடியோவினை வெளியிட்டார். அதில் அவர், முத்துக்குமரனின் பெற்றோரிடம் பேசியதாகவும் அவரது தாய் பேச விருப்பமில்லை என்று கூறியதாகவும், ஆனால் முத்துக்குமரனின் தந்தை பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நீங்கள் இருவரும் நண்பர்கள் தானே? என்றும் இதுகுறித்து 'கோர்ட்டில் கேஸ்' போடப்போவதாகவும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியதாகவும் மற்றொரு வீடியோவில் வாகிதா பேகம் விளக்கி பேசியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்