"அவருடன் தனிமையில் இருந்தேன்.." - பிக்பாஸ் முத்துக்குமரன் மீது வாஹிதா பேகம் குற்றசாட்டு! அடுத்தடுத்து 'டெலீட்' செய்யப்பட்ட பதிவுகள்

அவர் முத்துகுமாரனுடனான பழக்கத்தினை குறித்தும், அவரோடு தனிமையில் இருந்ததும் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.
Wahida Begum suicide attempt
Wahida Begum suicide attempt
Published on: 
Updated on: 
2 min read

இன்ஸ்டாகிராமில் பரவலாக அறியப்பட்ட பெண்ணான வாஹிதா பேகம் தற்போது தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தற்கொலைக்கு காரணமாக பிக்பாஸ் பிரபலம் முத்து குமாரனை அவர் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைத்தளங்களில் பர்த்தாவுடன் சினிமா பாடல்களுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தவர் வாஹிதா பேகம். பின்னர் அதற்கு அதிகமான எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்ததும் அதற்கு பதிலளிக்கும் வகையில் மீண்டும் வாஹிதா பேகம் வீடியோ ஒன்றினை வெளியிட்டார்.

அந்த வீடியோவானது பலரது கவனத்தையும் ஈர்த்து அதன்மூலம் பரவலாக வாஹிதா பேகம் அறியப்பட்டார். மேலும், அந்த வீடியோ மூலம் மக்களின் ஆதரவினையும் எதிப்பினையும் பெற்றார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் இவர் கணவனை விவாகரத்து செய்து தனியாக வாழ்ந்து வருகிறார். அந்த வீடியோ பிரபலமான போதுதான் பிக்பாஸ் பிரபலமான முத்துக்குமரன் இன்ஸ்டாகிராமில் ஆதரவு தெரிவித்து வாஹிதா பேகமிற்கு அறிமுகமாகியுள்ளார்.

இது நடந்து சில மாதங்களுக்கு பின்னர், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த வாஹிதா பேகம் முத்து குமாரனோடு பேச தொடங்கியதாகவும், அதன் பின்னர் அவரோடு தனிமையில் இருந்ததாகவும் கூறி வாஹிதா பேகம் குறிப்பிட்டு தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பதிவிட்டிருந்தார். பின்னர் அந்த வீடியோவில் தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி மாத்திரைகளை உட்கொள்வது போன்ற சில செயல்களில் ஈடுபட்டார்.

மேலும், அந்த வீடியோவில் தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும், அதனால் தான் பட்ட இன்னல்கள் குறித்தும் பேசிய அவர் முத்துகுமாரனுடனான பழக்கத்தினை குறித்தும், அவரோடு தனிமையில் இருந்ததும் குறித்தும் பகிர்ந்து கொண்டார். பின்னர் அந்த வீடியோக்கள் மட்டுமின்றி இதற்கு முன்பு அவர் பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

"தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட வாஹிதா பேகமிற்கு அதற்கு பிறகு என்ன ஆனது?" என்று இணையத்தில் பலரும் தங்கள் கேள்விகளை முன்வைக்க தொடங்கினர். அப்போதுதான் அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி-யில் "துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் உயிருடன் இருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டிருந்தார்.

Wahida Begum hospitalised
Wahida Begum hospitalised

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு பதிவில், “Bhaiyamma posted suicide video on Instagram before deleting all posts. She said BiggBoss Muthukumar was the reason for it...” என குறிப்பிடப்பட்டு வாஹிதா பேகமின் டெலீட் செய்யப்பட்ட வீடியோவை பதிவிட்டிருந்தனர். மேலும், முத்துக்குமரன், தன்னைப் பற்றி கருத்து தெரிவிப்பவர்களை பிளாக் செய்து வருவதாகவும் அந்தப் பதிவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் தமிழ்நாடு காவல்துறையை டாக் செய்து வாஹிதாவின் உயிரை காப்பாற்றி முத்துகுமாரனிடம் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், எதனால் வாஹிதா பேகமால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது? வாஹிதாபேகத்துக்கும் முத்துக்குமரனுக்கும் இடையே என்ன நடந்தது? இதுகுறித்து முத்து குமரன் பதிலளிப்பாரா? என்ற பல கேள்விகளை தற்போது பலரும் முன்வைத்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com