

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் -ன் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜனவரி 9 -ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்தது,. இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் சுமார் 80 ஆயிரம் பேர் நிகழ்ச்சியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு டிக்கெட் விற்பனை நடந்தது.
இதில் அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத், கதாநாயகி பூஜா ஹெக்டே ஆகியோருடன் இயக்குனர்கள், அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய, விஜய் இலங்கைக்குப் பிறகு, மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் உள்ளனர். இங்கு படமாக்கப்பட்ட சில தமிழ் படங்களை நான் நினைவு கூர விரும்புகிறேன். நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படமும் இங்க தான் எடுத்தாங்க, என்னுடைய. காவலன், குருவி போன்ற எனது படங்களும் இங்குதான் எடுக்கப்பட்டது.
எனது திரைப்பட வாழ்க்கையின் முதல் நாளிலிருந்தே நான் எல்லா வகையான விமர்சனங்களையும் எதிர்கொண்டேன். 33 ஆண்டுகளாக ஆதரவாக இருப்பது எளிதல்ல, ஆனால் என் ரசிகர்கள் அதை எனக்குச் செய்தார்கள். நான் வெறும் நன்றி சொல்ல விரும்பவில்லை. அவங்களுக்காக அடுத்த 30-33 வருடத்திற்கு நிற்க போறேன், இந்த விஜய் ரசிகர்களுக்காக, நான் சினிமாவிலிருந்து விலகுகிறேன் என்றார்.
வினோத் எப்போதும் சமூகப் பொறுப்புள்ள இயக்குநராக இருந்து வருகிறார். நாங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே சேர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது, ஆனால் அது நடக்கவில்லை.மேலும் வாழ்க்கையில் வெற்றிபெற, உங்களுக்கு நண்பர்கள் தேவையா என்று தெரியவில்லை, ஆனால் உங்களுக்கு நிச்சயமாக ஒரு வலுவான எதிரி தேவை. ஒரு வலுவான எதிரி இருந்தால் மட்டுமே, நீங்கள் வலிமையானவராக மாறுவீர்கள்” என பேசியிருந்தார்.
ஜனநாயகன் படம் குறித்து வெளியான விமர்சனங்கள் ஹெச்.வினோத் உடைத்து பேசியிருந்தார், “நிறைய பேர் சொல்றாங்க ஜனநாயகன் ஒரு ரீமேக் படம்னு, சிலர் இது பாதி ரீமேக்னு சொல்றாங்க. அவங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது இது 100 சதவீதம் தளபதி படம். 100 சதவீதம் சுவாரஸ்யமான படத்தை பார்க்கப் போகிறோம் என்கிற மனநிலையில் வாங்கஅதேபோல் ஜனநாயகன் படம் முன்ன பின்ன இருக்கும், உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம் தான். அய்யா இது தளபதி படம்” என பேசியுள்ளார். இந்த இடம் தான் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட இடம் என்கின்றனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் வருகிற ஜனவரி 14 -ஆம் தேதி வெளியாக உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பராசக்தி படத்தின் தேதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் பராசக்தியம் ஜனநாயகனும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. இதனால் தான் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்டார் என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.