
ராமதாஸ் 100 ஆண்டுகள் வாழ வேண்டும் எனவும், தந்தையர் தினத்தில் ராமதாஸுக்கு வாழ்த்துகள் எனவும், தம் மீது கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் எனவும் திருவள்ளூரில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் பகிரங்க மன்னிப்பு கேட்டதால் பாமகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்துள்ள நிலையில், தைலாபுரத்தில் ராமதாஸும், திருவள்ளூரில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் திருவள்ளூர் ஒருங்கிணைந்த பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில இளைஞர் சங்க செயலாளர் வ.பாலா என்கிற பாலயோகி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் து.சேகர், ஆனந்த கிருஷ்ணன், சிவபிரகாசம், பிரகாஷ். மாவட்டத் தலைவர்கள் விஜயன், ரமேஷ். பாண்டுரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமது தந்தையான ராமதாஸ் மன நிம்மதியுடன் நல்ல உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் 100 ஆண்டுக்குள் மேல் வாழ வேண்டும் என பேசியவுடன் கூட்டத்தில் கரவொலி பறந்தது. தொடர்ந்து அவர் பேசும்போது தமது தந்தையான ராமதாஸுக்கும் உலகத்தில் உள்ள அனைத்து தந்தைகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
“என் மீது கோபம் இருந்தால் தயவு செய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்! தந்தையிடம் மன்னிப்பு கேட்பது பெரிதல்ல” என்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்திருப்பதால் உங்களுக்கு சுகர் பிபி இருப்பதால் அதிகமாக டென்ஷன் ஆகாமல் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். நீங்கள் சொல்வதை மகனாக கட்சியின் தலைவனாக செய்து காட்டுகிறேன் என தெரிவித்தார். தன் மீது வருத்தப்படவோ கவலைப்பட கோபப்படவோ வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். 45 ஆண்டுகளாக நீங்கள் வளர்த்த கட்சியை உங்கள் கனவுகளை நினைவாக்குவேன் என்றார். தேசிய தலைவரான நீங்கள் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என பிரதமர் மோடியே சொல்லி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்று வரும் மோதல் நீண்ட நாட்களாக நீடித்து வரும் நிலையில் அன்புமணி தனது தந்தையிடம் மாவட்ட பொதுக்குழு மேடையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பது பாமக கட்சி தொண்டர்களை மகிழ்ச்சிடைய செய்துள்ளது. மேலும், பேசிய அவர், பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு எனவும், திமுக ஆட்சியின் கவுன்டவுன் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறது எனவும், சமூக நீதி என்றால். என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை எனவும், தமிழகத்தை ஆள தகுதியான ஒரே கட்சி பாமக எனவும், ஜூலை 25-இல் தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணம் 100 நாட்கள் தொடங்கப்பட உள்ளது எனவும்,10 கோரிக்கைகளை வலியுறுத்தி ராமதாஸ் பிறந்த நாளான ஜூலை 25-இல் நடைபயணம் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொண்டர்கள் மகிழ்ச்சி
தேர்தல் நேரத்தில் கட்சியில் இப்படி தந்தை மகன் மோதல் வலுத்துவருவது நல்லது அல்ல என்பதை நெடுங்காலமாக தொண்டர்கள் உணர்ந்து வருகின்றன. மேலும் 2026 -தேர்தலில் அனைத்து கட்சிகளும் மாற்றி மாற்றி தேர்தல் பணிகளை முடிக்கிவிட்டுக்கொண்டிருக்கின்றன.எனவே பாட்டை மக்கள் கட்சியும் இந்த பிரச்சனைகளை கடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த தொண்டர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சி தரும் சம்பவமாக அமைந்தது.
கடுப்பில் ராமதாஸ்!
ஆனால் அன்புமணியின் இந்த பேச்சு நிறுவனர் ராமதாஸை மேலும் கடுப்பேற்றியிருப்பதாக தெரிகிறது. எல்லா வியாழக்கிழமைகளிலும் அவர் செய்தியாளர்களை கூட்டி அன்புமணியை குறித்து பேசும்போதெல்லாம் “எனக்கு வயதாகி விட்டது. என்னை வீட்டுக்குள்ளே இருக்க சொல்லுகிறார்கள். சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் அதன் சீற்றம் குறையாது.96,000 கிராமங்களுக்கு சென்று உழைத்து நான் உருவாக்கிய கட்சி, ஆனால் என்னையே ஓரங்கட்டம் பார்க்கின்றனர்” என பேசியிருப்பார்.
தற்போது அன்புமணி பேசிய இடத்தை பொருத்தி பார்க்க வேண்டும், “ஐயாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.அவருக்கு சர்க்கரை வியாதி எல்லாம் உண்டு.. அவர் உடலை பார்த்துக்கொண்டு 100 ஆண்டு வாழ வேண்டும். என பேசியிருப்பது ராமதாஸை கடுப்பேற்றியுள்ளதாக தகவல வெளியாகி வருகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.