70 வயது மூதாட்டியிடம் தகாத செயல்களில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர்!

70 வயது மூதாட்டியிடம் தகாத செயல்களில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளர்!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளாா்.

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில், தூத்துக்குடி வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியை சார்ந்த முத்தம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நாள்தோறும் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், காலை வழக்கம் போல பணிக்கு வந்த அவரிடம் தலைமை காவலர் செல்வகுமார் ரைட்டர் ரூமில் புகையிலை உள்ளது எடுத்துட்டு வா என கூறியுள்ளார். அதற்கு அந்த மூதாட்டி என்னால் முடியாது நான் கிளம்புகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படி என்றால் காசு கொடு என கேட்டு செல்வக்குமார் அந்த மூதாட்டியிடம் தொந்தரவு செய்து அந்த மூதாட்டியிடம் பாலியல் சீண்டல் செய்து, தகாத முறையில் நடந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி, இதுகுறித்து மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஐயப்பனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 70 வயது மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தனது பணிகளை சரிவர செய்யாமல் இருந்த தலைமை காவலர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com