"எதையும் உற்சாகமாக செய்ய மனம் வரலையா?" - வேலையை தள்ளிப்போடாமல் இருக்க.. இந்த 6 ஜப்பானிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்

சிறு சிறு விஷயங்களிலும், முழுமை காண்பதை விடுத்துவிட்டு சின்ன சின்ன குறைகளையும் ரசியுங்கள்.
Japanese techniques
Japanese techniques
Published on: 
Updated on: 
2 min read

எப்போதுமே சோர்வாக, உந்துதலே இல்லாமல் இருக்கிறீர்களா?. உங்களது வாழ்வை மாற்றி சோம்பேறித்தனத்தில் இருந்து விடுபட இந்த 6 ஜப்பானிய வழிமுறைகளை கடைபிடியுங்கள்.

முதலாவது, இக்கிகை (Ikigai):

உங்கள் வாழ்க்கையின் நோக்கத்தை கண்டுபிடியுங்கள். தினமும் உங்களை உற்சாகமாக விழித்தெழச்செய்யும் ஒரு வாழ்வின் நோக்கத்தை தெரிந்துகொள்ளுங்கள். அதுவே உங்களது சக்திக்கான எரிபொருள் என்று கூட சொல்லலாம்.

இரண்டாவது, கைசேன் (Kaizen):

ஒரேநாளில் முழு உழைப்பையும் செலுத்தி ஒரு வேலையை செய்வதை விட தினமும் ஒரு சிறு விஷயத்தில் முன்னேற்றம் காண்பதில் உங்களது கவனத்தை செலுத்துங்கள். இது பொதுவாக பெருநிறுவனங்களில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. மேலும், இந்த முறையானது அனைத்து மட்ட தொழிலாளர்களாலும் பின்பற்றப்படுகிறது. இதனால், அந்த நிறுவனம் ஒரேநாளில் ஓஹோ..! என்று ஆகாவிட்டாலும், ஒருநாள் கட்டாயம் ஆகும் என்று கூறுகின்றனர்.

kaizen
kaizen

மூன்றாவது, போமோடோரோ முறை (Pomodoro Technique):

எந்தவித கவனச்சிதறல் இன்றி 25 நிமிடத்திற்கு உங்களது வேலையை கவனமாக செய்யுங்கள். அடுத்து ஒரு 5 நிமிடத்திற்கு இடைவேளை எடுத்துக்கொள்ளுங்க. மீண்டும் அதே வேலையில் முடிக்கும் வரை கவனத்துடன் ஈடுபடுங்கள். இது சிறிது நேரத்திலேயே அதிக வேலையை செய்ய உதவும். இத்தாலியில் 'போமோடோரோ' என்றால் 'தக்காளி' என்பது பொருள். மேலும், இந்த முறையானது, கவனத்தை மேம்படுத்துகிறது, கவனச்சிதறல்களைக் குறைக்கிறது, சோர்வைத் தடுக்கிறது, பொறுப்புணர்வை ஊக்குவிக்கிறது, ஊக்கத்தை அதிகரிக்கிறது.

Pomodoro Technique
Pomodoro Technique

நான்காவதாக, ஹரஹாச்சிபு (Hara hachi bu):

அதிகமாக உணவு எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் உணவு உண்ணும்போது 80% மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் பின்பற்றும்போது, உங்களது உடலில் நல்ல செரிமானம் ஆவதுடன், நீண்ட ஆயுளுடன் இருப்பதுடன், அதிக ஆற்றலையும் தருகிறது. இதனை பயிற்சி செய்ய நிதானமாக சாப்பிடுங்கள், உங்களையே நீங்கள் சோதித்து பாருங்கள். அதாவது தட்டில் உள்ள சாப்பாட்டினை நீங்கள் பசிக்கு சாப்பிடுகிறீர்களா? அல்லது ருசிக்கு சாப்பிடுகிறீர்களா? என்பதை சோதித்துப்பாருங்கள். குறைந்த அளவிலேயே உணவுகளை பரிமாறுவதன் மூலமும் இந்த முறையை நீங்கள் முயற்சிக்கலாம்.

Hara hachi bu
Hara hachi bu

ஐந்தாவதாக, சோஷின் (shoshin):

நீங்கள் செய்கின்ற எல்லா வேலைகளையும் அதிக உற்சாகத்துடனும், முதல் முறை செய்வது போன்ற அதிக ஆர்வத்துடனும் செய்யுங்கள். இதன் பொருள் நீங்கள், ஒரு முட்டாளாக இருக்கவோ அல்லது நடிக்கவோ சொல்வது இல்லை. மாறாக, திறந்த மனதுடன் கேள்விகளை கேட்பது, தனக்கு தெரியும் என்ற அணுகு முறையில் இருந்து கையாளாமல் அதில் புதிய கண்ணோட்டத்தை தேடுவது போன்றவையாகும்.

ஆறாவதாக, வாபி-சாபி (wabi sabi):

ஒவ்வொரு சிறு சிறு விஷயங்களிலும், முழுமை காண்பதை விடுத்துவிட்டு சின்ன சின்ன குறைகளையும் ரசியுங்கள். ஒரு வேலையை செய்யத்தொடங்குவது என்பது அதன் முழுமைக்காக காத்திருப்பதை விட சிறந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com